பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254


குறிஞ்சி - செம்மை (ஐவண்ணங்களில் ஒன்று) முல்லை - வெண்மை; மருதம் - மஞ்சள்; நெய்தல் - நீலம் என வண்ணப் பொருத்தம் படிப்படியாக அமையவைத்தனர். மேலும், ஒரமைப்பைக் காண்கின்றோம். பூக்களின் கோட்பூப் முதலிய நான்கு வகைக்கேற்பவும் இத்தேர்வு அமைந்துள்ளது. இதன்படி, கோட்டுப் பூ - மருதப் பூ: கொடிப் பூ - முல்லைப் பூ; நிலப் பூ (புதர்ப் பூ) - குறிஞ்சிப் பூ; நீர்ப் பூ - நெய்தற் பூ; -என வகைப் பொருத்தம் அமைய வைத்துளர். இவ்வமைப்பில் தொடர்ந்த வளர்ச்சிப் பொருத்தத்தைத் தனி ஆய்வின் வழியாக முயன்றால் காணவும் கூடும். வண்ணத்தாலும் மணத்தாலும் பெருக்கத்தாலும் தோற்றத் தாலும் முன்னைச் சான்றோர்தம் அகத்தைக் கவர்ந்த பூக்கள் அகப் பூக்களாயின.