பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258


திணையுள் துறைகளாக்கி முறையே, கந்தழி, முற்றுழிஞை, காந்தள் எனப் பெயர் கொடுத்தார். இவ்விலக்கணத்தைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; மறுத்தனர். நச்சினார்க்கினியர், "இனித் தேவர்க்குரியனவாக உழிஞையிற் றுறைகள் பலரும் கூறுவராலெனின் அவை உலகியலாகிய அரசிய லாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலின் தமிழ்கூறு நல்லுல கத்தன அல்ல என மறுக்க' -என மறுத்தார். வன்மை யாக மறுத்தார்; உரிய காரணங்கூறி மறுத்தார். அவர் எழுதி யுள்ள சொற்கள் கூர்ந்து நோக்குதற்கு உரியவை. உழிஞை முதலிய பூக்களைச் சின்னமாகச் சூடிப் போர் செய்தல் "உலகிய லாகிய அரசியல்' என்று உலகில் நடமுறையாக உண்மையில் நிகழ்ந்ததைக் குறிக்கின்றார். தமிழக அரசியலில் எக்காலத்தும் கடைப்பிடிக்கப்பட்டதைக் காட்டுகின்றார். 'ஒருகால் ஒருவர் தாம் விரும்புவதற்காகச் செய்யப்படுவது அன்று'-என்று மறுக்கின்றார். "எக்காலத்தும் மேற்கொள்ளப்பட்டுவந்த மரபு' என்கின்றார். யாவற்றிற்கும் மேலாக முத்திரையிடுவதுபோன்று இவ்வரையறை யும் நடைமுறையும் :தமிழ் நிலத்திற்கே உரிய மரபு' என்கின்றார். ஆனாலும், ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலை யில் படைத்துக்கொண்ட இலக்கணம் பின்னர் எழுந்த இலக்கியங் களில் மேற்கொள்ளப்பட்டது. ஐயனாரிதனார் போர் கருதிப் பூச்சூடுவதை இன்றியமை யாததாகக் காட்டக் கடவுளரே சூடியதாக ஏற்றினார். முருகனுக் குரிய போர்ப்பூ காந்தள் என்பர். அதனையும் குறித்து, - "குருகு பெயரிய குன்றெறிந் தானும் உருகெழு காந்தள் மலைந்தான்-பொருகழல் கார்கருதி வார்முரசம் ஆர்க்கும் கடற்றானைப் போர்க்ருதி யார்மலையார் யூ"2 -எனப் போர் கருதி முருகனே பூச்சூடினான்; மக்கள் மலையாது போவரோ? -என்றார். இது மரபை மாற்றிக் காட்டிய செயல். பூச்சூடும் மரபு தமிழர்தம் 1 தோல்: பொருள்: 61. உரை * புறப் வெ. மா. உழிஞை:வெண்பா 8,