பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260


அகத்திலும் போர் புறப்போர் உண்மை அடிதடி, அகத்திலும் புலவியால் பூசல் நேரும். புறப்போர் ஆனோடு ஆண் பொருவது. அகப் போர் காளையோடு குமரி மோதுவது. இதிலும் தும்பை சூடிய தாகப் பாடினர். . காமவேள் என்னும் மன்மதன்தான், காதல் வம்புக்கு விதை ஊன்றுவான். இக்காதல் போரில் ஒரு குமரியைத் தாக்கிக் குலைக்க இம் மதவேள் போர் தொடுத்தான். "தோகை உயிர் முடிப்பான் தும்பை முடித்தான் மதவேள்” இது குமரகுருபரர். என்னும் துறவியார் காமனுக்கு முடித்துவிட்ட தும்பை. இது போன்று காதலுடன் காமப் போர் தொடுக்கும் காதலிகள் தும்பை சூடியதாகப் பாடினர். எதையும் சுவையுடன் வழங்கும் திறன் படைத்த கல்வியில் பெரிய கம்பர் இவ் வகப்போரைப் புறப் போருடன் தொடுத்துக் கையாண்டார். - இராவணன் இறுதிப்போர்க்குப் புறப்படுகின்றான். போர்க், குரிய ஒப்பனைகளைக் கொண்டான். பொன்னாற்செய்த வாகை மாலை ஒன்றையும் அணிந்து கொண்டான். வெற்றி பெறுவதற்கு முன் அணிந்தான் என்பதன்று. முன்னர் தேவருடன் நடந்த போரில் அவர்கள் பணிந்து சூட்டிய வாகை மாலை அது. இதை இப்போது அணிந்ததாகக் கம்பர் குறிப்பது ஒரு குறும்பு இறுதிப் போர்க்குச் செல்லும் இவன் இனி வெற்றி பெற்று வாகை அணியப் போவதில்லை என்பதன் குறும்புக் குறிப்பாக அணிய வைக்கின்றார். அத்துடன் களத்தில் இறங்கும் போருக்குரிய தும்பையும் சூடினான். இத்தும்பை சூடியதைக் குறிக்கும் கம்பர் ஒர் அகச்சுவையைப் பொடிவைத்துப் பொருத்தினார். - இராவணன் வாழ்வில் இதுவரை தோல்வியே காணாதவன். ஆனால், அவன் வெற்றியெல்லாம் புறப்போரில்தான். அகப்போரில் ஆண்கள் வெற்றி சிறப்பன்று. காதற்போரில் தோற்றவர்தான் வென்றவர்’ என்றார் திருவள்ளுவர். இராவணன் பாசறைகளில் வென்றவன்; பள்ளியறைகளில் தோற்றவன். காதல் மகளிர் 1. காசிக் கலம்பகம்: 11 .