பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

 குதிரைப் படையேறிப் போர்தொடுப்பான். இதற்கு மடலேறுதல், என்பது இலக்கணம். பனை ஒலையால் குதிரைபோன்று செய்து அதில் ஏறிச் செல்வதுபோன்று நடிப்பான். 'இவள் எனக்குரிவயள் என்று ஊர் சிரிக்கடிக்கும் போர் இது. காதலி வீட்டில் அடைத்துக் கொண்டு இவனைப் பாரா முகமாக இருப்பாள். அன்றிப் பெற்றோர் அவளை அடைத்து மனம் செய்து கொடுக்க மறுப்பர். இவர்களை முற்றுகையிடுவது போன்று நடிப்பு இத்தலைவனுடையது. அஃதாவது, அவளை அடைத்து வைத்துள்ள அவர்களது எண்ணத்தை மறுத்து முற்றுகையிடும் உணர்வு முற்றுகை இது, இந்த மடலேறும் நிகழ்ச்சியில் சில பூக்களைச் சூடிக்கொள்வான். பெரும்பாலும் எருக்கம்பூவும், ஆவிரைப் பூவும், பூளைப் பூவும் சூடப்படும். கலித்தொகை படைத்த ஒரு தலைவன் இது அகப்போர் முற்றுகை' என்பதை அறிவிப்பான் போன்று முற்றுகைக்குரிய உழிஞைப் பூவையும் சூடிக் கொண்டான். அவனே பேசினான்: நான் குடியிருப்பது, - “பூ அல்ல பூளை, உழிஞையொடு யாத்த' -எனது காதலின் தொய்வு உணர்ச்சி என்றான். முற்றுகை உணர்ச்சி யின் உருவமாகவே இப்பூவைக் கொள்ள வேண்டும் என்று பேசு கின்றான். இவ்வாறு புறப்பூவாகிய உழிஞை அப்புறத்திணைத் தொடர் புடன் அகப்பொருளில் காதற் கருவியாயிற்று. அறிவிப்புச் சின்னம் அகத்துறைக்கு இவ்வாறாகுவது போன்று புறத்தில் உள்ள ஏத்திணைக்கு உரியதோ அத்திணைப் பொருளுக்கன்றி வேறு பொருளுக்குப் புறப்பூ சின்னமாகச் சூடப்படுதலும் உண்டு. நொச்சித் திணை என்பது கோட்டையை அடைத்திருப் போன் பகைவர் முற்றுகையைத் தகர்க்க எழும் போர் ஒழுக்கம் இதுபோது நொச்சிப் பூ சூடப்ப்டும். நொச்சிப்பூவைச் சின்ன மாகக் கொள்ளும் வேறு மரபு ஒன்று தெரிகின்றது. ... < 1. கலி : 140 : 4