பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/299

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
263


அக்காலத்தில் ஊரில் நிகழும் கோவில் திருவிழாவை ஊர் மக்களுக்கு அறிவிப்பர். அவ்வறிவிப்பை ஊரில் வாழும் குயவனைக் கொண்டு செய்வர். அவன் பொதுவாக அன்றி வீடுதோறும் சென்று அறிவிப்பான். அவ்வாறு திருவிழாவை அறிவிக்க வரும் அறிகுறியாக நொச்சிப் பூவைச் சூடிக்கொள்வான். அக்காலத்தில் கோயிற் பூசெய் உரிமை குயவர்க்கிருந்தது. ஒரு காதலி. திருவிழாவைச் சொல்ல வந்த குயவனுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றாள். திருவிழாவை அறிவிப்பதோடு என் காதலனுடன் பொய் சொல்லித் திரியும் ஒரு பாணன் இருப் பதையும் ஊரார்க்குச் சொல்’ என்பதாக வேண்டுகின்றாள். அக்குயவனை விளித்துப் பேசுபவள், 'ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி யாறு கிடந் தன்ன அகல்நெடுந் தெருவில் காறென (திருவிழாவென) துவலும் முதுவாய்க் குயவ!' -என்று அவன் சின்னமாக அணிந் துள்ள நொச்சி மாலையையும் சொல்லிக் காட்டுகின்றாள். திருவிழா அறிவிப்பின்போது மட்டு ன்று திருவிழா நிகழ்ச்சி யின் போதும் இக்குயவன் தன் பணிக்குரிய சின்னமாக நொச்சி மாலையை அணிவான். . 'மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி - பலிகள் ஆர்கைப் பார்முது குயவ'2 -னைப் நற்றினை யில் கயமனார் என்னும் புலவர் காட்டுகின்றார். இவ்வாறாகப் புறப் பூவின் மரபுத் தோற்றத்தையும் காலம் போக்கின் மாற்றத்தையும் காணமுடிகின்றது. என்ன மாற்றமாயி னும் பூ தன் நிலையில் மாற்றமின்றிக் கையாளப்பட்டிருக்கும் உண்மையையும் காண்கின்றோம். இனிப் புறப்பூ நெறியில் முற்காலப் பாங்கைத் தொடரலாம் 1. தற் : 220 : 2.4 2 நற் 293 : , 2