பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/312

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
276


இது கொட்டையாகக் காய்க்கும். எனவே, இதனைக் கொட்டைக் கரந்தை' என்றும் வழங்குவர். இதன் முதல் நிறம் சிவப்பே. பின்னர் கலப்பால் உண்டான நிறம் நீலங்கலந்த சிவப்பு. சிவந்த கரந்தைப் பூவே புறப்பூவாகச் சூடப்படுவது. இச்சிவந்த கரந்தைப் பூவைச் சிவபெருமானுக்கும் சூட்டி வழிபட்டனர். எனவே சிவபெருமானுக்குரிய பூவாகக் கரந்தையும் அமைந்தது. தேவார ஆசிரியர்கள் கரந்தையைச் சிவபெருமானுக்கு அமைத்துப் பாடினர். கந்த புராண ஆசிரியர் முருகனை, 'கரத்தை சூடுவான் திருமகள் இளையோன்' என்றார். 'கரந்தை திருமுடிமேல் காணக் கண்டா'ராம் அப்பர். இந்த நிறத்தில் சமயப் பங்கும் இடம் பெற்றது. சிவந்த நிறச் சிவனுக்கு அமைந்த சிவப்புக் கரந்தைப் பூ சிவ கரந்தை' என அச்சமயத் தாரால் கொள்ளப்பட்டது. இதனை அறிந்த திருமாலியத்தார் நீலங்கலந்த சிவப்புக் கரந்தைப் பூவை நீல நிறத்துக் கடவுளாம். திருமாலுக்குரியதாக்கி விட்டனு கரந்தை' என்றனர். நாட்டு வழக்கில் 'விச்ணு கிரந்தி என்பர். . கரந்தைப் போரில் வென்றாலும் தோற்றாலும் வம்பு வளரும், போர் மூளும். எவரேனும் முதலில் தாக்குவதற்கு முனைந்துப் பகைவர் மேற் செல்வர். வாயாற் சொல்லாமல் பூவாற் சொல்லிச் செல்வர் என்ன பூவாற் சொல்வர்? 12. கந்தி: 4. அக்கிளிமுகாசன் வகை : 14. .