பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முற்றுகை மலர் உழிஞை

பொன் கொடி

உழிஞைப் பூவாற் பெயர் பெற்றது உழிஞைத் திணை. பகைவர் அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இப்பூவைச் சூடுவர். இஃது ஒரு கொடிப் பூ. "நுண் கொடி உழிருை'! "நெடுங்கொடி உழிஞை'2 - எனப் பல இடங்களில் குறிக்கப்படும். எனவே இக்கொடி கம்பி போன்று நுண்ணிய கொடி. நீண்டு வளரும் கொடி. இக்கொடி எத்தகையது என்பதை, "நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து'3 - என்னும் இடைக்குன்றுார் கிழார் பாடல் அடி காட்டுகின்றது. இத் தொடரையே ஈரிடங்களில் அமைத்துள்ளார். இவ்வடியிலுள்ள "பவர் கொடிஎன்னும் பொருளைத் தருகின்றது. முன்னே கொடி உழிஞை என்றவர் பின்னும் பவர் என்று கொடிச்சொல்லை அமைத்துள்ளமை எண்ணற்கு உரியது. பவர்’ என்னும் சொல், நெருக்கம், செறிவு, பரவல் என்னும் பொருள்களைக் கொண்டது. எனவே, உழிஞைக் கொடி செறிந்து பரவி வளர்வது. இதன் இலையும் பூவும் கொடியின் கணுப்போன்ற இடங்களில் அமைந்திருக்கும். இக்கொடியும் தளிரும் பூவும் ஒரே நிறமுடையவை. பொன் வண்ண மஞ்சள் நிறங் கொண்டவை. "பொலங்கொடி உழிஞையன்'4 'பொலங் అణg உழிஞை' -என்னுமிடங்கள் பொன் பதிற் : 48:28, 44 : 10, பதி : 48 : 44 : 1.0 புறம் ; 76; 5; 77 ; 8, பதி. பத்து : 56. புறம் : 50 : 4,