பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/330

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294


துரக்கத்தை மறந்துது டிக்கின்றன. செவிகளும் தேங்கிவிடவில்லை. அவன் சொன்ன குறியில் கவனம் வைத்துள்ளன. அவள் செவி மடலை ஒரு கையாற் குவித்துப் பிடித்துக் கொண்டு கிடக்கின்றாள். தனது துடிப்பை அவளே வெயிடுகின்றாள் : * - "கூடுதல் வேட்கையால் குறிபார்த்துக் குரல்நொச்சிப் பாடு (ஒலி) ஒர்க்கும் செவியொடு பைதலேன் யான்' எவ்வொலியும் இல்லாத அமைதியான நள்ளிரவில் நொச்சிப் பூங்கொத்து குளத்து நீரில் விழும். ‘உலொக் என்றொரு ஒலி எழும். இதனை எதிர்பார்த்துக் கிடந்தவள் பேச்சு அது. ஒலியைக் கேட்ட மற்றொருத்தியின் பேச்சு இது: 'மயிலடி யன்ன மாக்குரல் நொச்சி அணி மிகு மென்கொம்பு ஊழ்த்த மணிமருள் பூவின் பாடு (ஒலி தனிகேட்டு"2 தூங்கவில்லை என்கின்றாள். இவ்வாறு களவுக் காதலிகளுக்கு மணியாக ஒலித்து நள்ளிரவைக் காட்டும் மணிப்பொறியாக நொச்சிப் பூ துணைநின்றது. தனது வீழ்ச்சியிலும் காதலுக்கு உதவிய நொச்சிப் பூ வீரத்திற்காகக் குருதிக் கறை ஏற்ற கருத்தும் உண்டு. நொச்சி வீரன் நொச்சி மாலை சூடிப் போர் செய்தான். பகைவன் தாக்கியதால் தன் உடலிலிருந்து கொப்புளித்த குருதி, மார்பிற் கிடந்த மாலையை மூழ்கடித்தது. நொச்சிப் பூவின் கரு நீல நிறம் குருதிப் படிவால் சிவந்த நிறம் ஏறப் பெற்றது. சிவந்து புரளும் நொச்சி மாலையை ஒரு பருந்து பார்த்து 'இது இறைச்சித் துண்டு என்று கருதி இழுக்க முனைந்ததாம். இக் காட்சியைத் தாம் கண்டதாக வெறிபாடிய காமக்கணியார், 'வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரத்து ஒருவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்து (கருதி) பருந்துகொண் டுகப்ப யாம் கண்டனம்”3 -என்றார் இவ்வீரக் காட்சியைக்கண்டு பாடும்.காமக்கணியார் மனக்கண்ணில் அகத்திணைக் காட்சி ஒன்று முந்திக் கொண்டு நிற்கின்றது. 1. கலி : 46; 12, :18, 2 குறுந் :18813, 5, 8. புறம் : 27 : 5-7