பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/333

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

စ္တပ္ပီနီ தும்பை ஒன்றை இவ்வாறு எடுத்து மொழிந்தார். இஃது ஒரு சிறப்பாகலாம். பேர்ர்கருதித் -- ه ۰۰۰ ه ه . . . . هه ۰ ه ه به ف . . . ... ه * " துப்புடைத் தும்பை மலைந்தான் ' - என்றபடி களப் போரின் அறிகுறியாகத் தும்பைப் பூ சூடப்பட்டது. வெட்சிமுதல் நொச்சி வரை எதுவாயினும் களத்தில் கைகலப்பு நேரும்போது துப்பைத் திணையாகும். தும்பை என்றாலே போர் என்ற பொருளும் அமைந்தது. "யுத்தம் ஆகவம் தும்பை சமரம் ... . . ... ... இன்னன போரே' ? - எனப் பிங்கல நிகண்டும் பிற நிகண்டுகளும் பொருள் வகுத்தன. இலக்கியங்கள் பலவும் இப்பொருளில் தும்பையைக் கையாண்டுள்ளன. எனவே, புறத்தில் போர்ப் பூ தும்பைப் பூ. போர்க்களத்தில் இரு படைகளும் போரில் கைகலக்க இறங்கின என்பதன் சின்னமாக இரு படைகளும் தும்பைப்பூவைச் குடும். இவ்வாறு தும்பைப் பூ ஒன்றே இரு தரப்பிலும் இடம் பெற்றது. இஃது அடுத்த ஒரு சிறப்புப் போலும். செடியும் பூவும் இப் பூவைத் தருவது ஒரு செடி. இச்செடி கடல் மட்ட நிலத்திலும் ஏறத்தாழ 3000 அடி உயரப் பகுதி வரையிலும் முளைத்து வளரக்கூடியது. இதனை மருத நிலத்திலும் முல்லை நிலத்திலும் காணலாம். எனவே இது முல்லை, மருதம் என்னும் இரு நிலத்திற்கும் உரியதாகின்றது. நிலத்தாலும் இரண்டிடச் சிறப்பு பெறுகின்றது. இச்செடி துளசி இனத்தைச் சார்ந்தது.

துளவியல் தும்பையும்" எனக் கம்பரும், துளசி இயல் புடைய தும்பை என்றார். கபிலர் தம் குறிஞ்சிப் பட்டியலில் துேம்பை துழாய்" என அடுத்தடுத்து வைத்ததும் இக்குறிப்பின

1 புற. வெ. மா : தும்பைத்திணை : 1. 3 குறி. பா : 90