பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299


- பல புற இதழ்களில் பல அக இதழ்கள் அமைந்து தொகுப்புக் கொத்தாகத் தோன்றுவதால், "கொத்து அலர் தும்பை' என்றும், "சுந்தரத் துணர் மென் தும்பை” - என்றும் பாடப்பட்டது எனவே, தும்பைப் பூ கொத்துப் பூ எனலாம். அனைத்துப் புற இதழ்களிலும் அகவிதழ் நிறைவாக ஒரே காட்சியில் மலராது. இந்நிலையில் பைந்தும்பையாகக் காட்சி தரினும் அனைத்து அக இதழும் நிறைந்து அமையின் அஃது அழகிய முழு வெண்மைச் செண்டாக விளங்கும். மலர்களின் வண்ணத்தை அவற்றின் அகவிதழ் கொண்டே சுட்டுவதால் தும்பை துயவெண்மை நிறப் பூ. இவ் வெண்மையான அக இதழ் ஒன்றைத் தனியே எடுத்துச் சூட இயலாது. எனவே பல புற இதழ்கள் செறிந்த கொத்தாகவே சூடினர். 'கொத்தலர் தும்பை சூடிக் கோவிந்தன் வாழ்க வென்னா கைத் தளத் தெ.:க மேந்தி காளை போல் வேறு நி ன் ற ர ன்' - என்று திருத்தக்க தேவரும் பாடினார். ... . . . . சூடும்போது இலைகளும் இடம் பெறும். பசுங்கிண்ணத் தோடு கிண்ணத்தின் மையத்திலும் கவட்டிலைகள் ஒட்டியுள்ள மையால் இலைகளை எடுத்துவிட்டுச் சூட இயலாது. இலையோடு சூடியதை, - "இளவரிக் கவட்டிலையோடு ஏர்பெறத் துளவியல் தும்பையும் சுழியச் சூடினான்’2 -எனக் கம்பரும், 1 சீவ, சி 2277, 2. கம்ப : முதற்போர் : 115,