பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


306 "அவை சொல்லானும் பாட்டானும் கூத்தானும் மல்லானும் சூதானும் பிறவற்றானும் வேறலாம்” -என வெற்றியைக் கொள்ளும்போர்களைக் குறித்தார். சொற்போர், இசைப்போர், கூத்துப் போர், மற்போர், சூதாட்டப் போர் முதலியவற்றில்வெல்வதும்வாகைத் திணையில் அடங்கும். கல்வியிற் கேள்வியிற் கொடையிற் படையில் வெல்லுநர் அணிவது வாகை யாகும்” . - எனப் பிங்கல நிகண்டு கேள்வியையும் கொடையையும் இணைத்தது. இவற்றிற் பெறும் வெற்றிக்கும் வாகை சூடப்படும் எனக் காட்டிற்று. உண்மையாகவே இவ்வெற்றிகளுக்கு வாகைப் பூ சூடப்பட்டது எனக்கொள்ள வேண்டியதில்லை. வேண்டுமாயின் பொன்னாற் செய்த வாகைப் பூ சூட்டப்பட்டிருக்கலாம். அன்றி வாகை சூடியதாக மரபிற்குச் சொல்லப்பட்டிருக்கலாம். பராசரன் என்றொரு நான்மறை வல்லுநன். அவன் தனது நாவன்மையால் சொற்போரில் எதிர்த்தோரை ஒட்டி வென்றான். அவன், 'நா வலங்கொண்டு நண்ணார் ஒட்டிப் . பார்ப்பன வாகை சூடி’ 2 னான் எனப்பட்டான் வெற்றி விருதாகப் பொன் வாகை சூட்டப்பட்டிருக்கலாம். இது சொற்போர் வாகை. கலைப் போர் வெற்றியிலும், “... .. * ***i :م. ي . : « ه ی ه »ه م... - போர்வாள் மறவர் வருக தாமென வாகைப் பொலந் தோடு பெருநா ளமையம் பிறக்கிடக் கொடுத்து"3 ச் சிறப்பித்த தாக இளங்கோவடிகள் பாடினார். எனவே, பெரும்பகுதி செயற்கை ణ சூடுவதும், வெற்றிபெற்ற நிலையில் பொதுவில் வீரர் இயற்கை வாகைப் பூவைச் சூடி வெற்றி கொண்டாடுவதும் நடை முறையாக இருந்திருக்கும். - 1. பிங். தி : 1881. 2. சிலம்பு : 23 :11, 12. 8. சிலம்பு : 17:42 – 44.