பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/350

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
314


வாகை இரண்டு மேலே காணப்பட்ட வாகை போன்ற மரம் மற்றொன்றையும் இன்றும் காண்கின்றோம். இக்காலத்தில் இது தூங்கு மூஞ்சி மரம் என்று வழங்கப்படுகிறது, 'துரங்கு' என்னும் பெயர் கதிரவன் மறைந்ததும் அதன் இலைகள் இரண்டு ஒட்டி மூடிக் கொள்பவை என்பதால் இடப்பட்ட பெயர், இப்பெயர் இதன் இயற்பெயராகாது. இன்றும் பல முதியோர் இதனைக் கருவாகை என்றே வழங்குகின்றனர். இம்மரமும் முன்னே காணப்பட்ட வாகை யும் பலவகையில் ஒற்றுமையும் சிலவகையில் வேறுபாடும் கொண்டவை. ஆனால், ஒரே இனத்தவை. இரண்டும் பெருமரமாக உயர்ந்து வளர்பவை; பரவலாகக் கிளைகளைப் பரப்புபவை; இலைகள் கவட்டிலைகள்; ஒரே அமைப்பான வடிவமைப்புள்ள பூவைக் கொண்டவை; துய் என்றிருக்கும் பூவைக் கொண்டவை; அப்பூக்களும் பளபளப்புள்ளவை. இரண்டும் மயிரிழை போன்ற இதழ்களைக் கொண்டவை. சில வேறுபாடுகள்: முன்னதைவிடப் பின்னது கருமையான மேம் பட்டை யைக் கொண்டதால் கருவாகை எனப்படுவது. கவட்டிலையாயினும் தனியிலை வடிவில் சிறிது வேறு பாடு உண்டு, . . பின்னதில் இலைகள் மாலையில் மாலை நேரத்தில் . ஒட்டிக் குவிந்துகொள்ளும். முன்னதன் பூ வெண்மை நிறம், பின்னதன் பூவோ செந்நீல நிறம். . இங்கு இவற்றின் நிறமாறுபாடுகளே எண்ணத்தக்கன.