பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/416

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
380


காந்தள் சொல்லில் காந்தள் காந்தளுக்குரிய பெயர்களில் 'காந்துகம்' என்பது ஒன்று எனக் கண்டோம். காந்துதல்=வெப்பத்தை வெளியிடுதல்ஒளிபரப்புதல் என்னும் பொருள் தருவது. இச்சொல், காந்து-கான்று-கான்-கால் (கால் சீயா முன்-சிலம்பு) -என்னும் வேரடிகொண்டு ஒளிப்பொருளை உணரலாம். இதன் இணைப்புச் சொல்லுருவம் காந்துகம். இதன் அடித்தளப் பொருளிலேயே 'காந்தள் என்னுஞ்சொல் அமைந்தது. எனவே, பொதுவில் கொடிக்கு இப்பெயர் வழங்கினாலும் மூலத்தால் பூவின் தன்மை கொண்டதாகவே இப்பெயர் அமைந்தது. அப்பூவிலும் சிறந்த நிலைக்குச் சிறப்புப் பெயராகவும் அமைந்தது. இது கொண்டே கபிலர் பொதுவாக இதன் பெயரைக் குறித்த இடத்தும் செங்காந்தள் என்றார். ஆனால், இச்செங்காந்தள் என்னும், அடைமொழி வரும் இடங்களில் மற்றொரு குறிப்பு அமைந்துள்ளது. அக்குறிப்பு யாது? தோன்றிப் பூ சிவப்பு நிறக் காந்தள். ஆனால், அதன் நிறத்தைக் குறிக்கும் அடைமொழிகளாக உவமப்படும் சொற்க ளாகிய எரி, குருதி, சுடர் முதலிய சொற்கள் அமைந்திருக் கின்றனவே அன்றி செம்மை அடைமொழிசேர்த்துச் செந்தோன்றி s என்று அமையவே இல்லை. 'செம்பூ' என்றுள்ளது. ஆனால் கோடல் வெண்கோடல் என்று அடைமொழி பெற்றதைக் கண்டோம். சங்க இலக்கியங்களில் செங்காந்தள் என்னும் அடை மொழித் தொடர் வருகின்றது. அங்கெல்லாம் சிவப்பு நிறத் தோன்றியினின்றும் பிரித்துக் காட்டுவது போன்ற குறிப்பையே காண்கின்றோம். என்ன குறிப்பு? r "மவைச் செங்காந்தள் கண்ணி தந்தும்'1 -என நற்றிணை عیسیسیسم مساس سن-سسساسیس-سمینامه தற் : 178 : 2,