பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/420

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
384


நத்தத்தனார் : செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்' (சிறுபாண்:167) பரணர் : காந்தள் முகை புரை விரல்’ (புறம்:144:8, 9) கூடலூர்கிழார் : முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்' (குறுந்:167:1) கம்பர் : கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் (கம்ப:வரை:531) இப்பெரும்புலவர்களது வண்ணனைகளை நோக்கினால். அரும்பு மலரும் நிலையும், கீழ்நோக்கிய விரல் உவமையும் புரியும், மிக விரிவடையாமல் இதன் இதழ்கள் கீழ்நோக்கித் தொங்கும் நிலையில் விரல்கள் குவிந்த இரு கைகளைச் சேர்த்து இணைத்துக் கட்டித் தொங்கவிட்டது போன்று காட்சியளித்த தாம், இரு கைகள் எப்போது சேர்த்துக் கட்டப்படும்? சிறைக் கைதியாகும் போது கட்டப்படுமன்றோ! சிறைக் கைதியாவது போரில் தோற்றால் நிகழும். இதனை, போர்தோற்றுக் கட்டுண்டார் கைபோல்வ, கார்தோன்றும் காந்தள் செறிந்த கவின்' எனக் குன்றம்பூதனார் விளக்கினார். - "கைபோல் காந்தள்-காந்தள் போல் கை' என்றும் இதர விதர உவமையாகப் பேசப்படுவது காந்தள். துடுப்பு என்னும் முன்னங்கைமேல் குவிந்து, கூம்பி நிற்கும் இதழ்கள் கைவிரல்களைக் கூப்பி இருப்பதுபோன்றுள்ளன. இக் காட்சி கைகுவித்துக் கும்பிடுவது போன்றதாக, காந்தள் அம் துடுப்பில் கவிகுலை அன்ன செறிதொடி முன்கை கூப்பி" 2 -என்றார் உருத்திரங் கண்ணனார். இங்கு, கவிதல்என்பதற்கு நச்சர் ஒன்றோடொன்று சேர்தல் எனப் பொருத்தமாக உரை எழுதினார், . 1. பரி: 18:34, 85, * սա, սր : 15ն, 154,