பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392


காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவார் உளராகலின் 'வெறியாட்டு அயர்ந்த காந்தள்’ என்றார். அன்றியும், காந்தள் என்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றாளாகிய பெண்பால்மாட்டு நிகழும் வெறி “காந்தள் எனவும் பெயராம்.' -என்று காமக் களத்தில் காந்தள் பெற்ற இரண்டு இடத்தைக் குறித்துள்ளார். இரண்டில் வெறியாடும் வேலன் "காந்தள் சூடி ஆடுதலில் காந்தள் என்றார்" என நச்சினார்க்கினி யர் காந்தள் சூடுவதைக் குறித்தார். இதுபோன்று மடலேறும் போதும் காந்தள் சூடப்படும். எனவே, இரு துறைகட்கும் காந்தள் 'சின்னப் பூ ஆயிற்று. காந்தளின் பெயரால் காந்தளூர் என்றொரு ஊர்ப்பெயர் அமைந்தது. காந்தளூர்ச் சாலை கலம் அறுத்தருளி' -என இராசராசனது மெய்க்கீர்த்தி சொல்லும். காந்தள் வேலியிற் படர்ந்து விளங்கும் ஊர் மலைப்பகுதி 'காந்தள் வேலி ஒங்குமலை நன்னாடு"? -எனப் பட்டது. ஊராகவும் மன்னனாகவும் பெயர்பெற்ற இது, செல்வ ராகவும் சிறப்புற்றது. 'காந்தள் மலராக்கால் செல்லாவாம் செம்பொறி வண்டினம்’’’ என்று நாலடியார் குறித்ததை முன்னரும் கண் டோம். இதனை ஒர் உவமையாகக் காட்டினார். எதற்கு உவமை யாக்கினார்? செல்வம் இருப்பவரை நாடியே உறவினர் சூழ்வர். செல்வம், "இலாஅர்க்கு இல்லை தமர்" என்று செல்வம் இல்லாத வரை நாடிச் செல்லாமைக்கு உவமையாக்கினார். இவ்வகையில் காந்தள் செல்வர் ஆகியது. 1 தொல். பொருள் : புறத்தினை : உரைகள், 2 குறு : 76 : 1. - 8 நாலடி : 283 : 4.