பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395

"... ... ... --குன்றம் குருதிப் பூவின் குலலக் காந்தட்டே' என்னும் குறுந் தொகையின் முதற்பாடல் போன்று பிற இலக்கியங்களும் குறிஞ்சித் திணைப்பாடல்களில் இப்பூவை வைத்துள்ளன. முன்னே காந்தளை மலைப்பூவாகக் காட்டிய பலபாடல் களாலும் இதை உணரலாம். எனவே, காந்தட் யூ குறிஞ்சி கிலப் பூ. ஆயினும் பரவிய அளவில் பிற நிலங்களிலும் இடம் பெற்றது. “............ ... புனர்கோடல் பூங்குலை ஈன்ற புரவு' எனப் புரவாம் முல்லை நிலத் தில் புணர்ந்தது. முல்லை நிலத்து முல்லைப் பூவுடன் தோன்றி பூப்பதை, "நறுவி முல்லையுடன் தோன்றி தோன்ற வெறியேன் றன்றே வீகமழ் கானம் 2 -என்றுபாடி முல்லை நிலக் கானம் மனப்பதை வெளிப்படுத்தினார் தமிழக் கூத்தன் நாகன்தேவனார். 'நீசயற் கலித்த நெறிமுகைக் காந்தள்' -எனக் கேசவனார் நீர்நாட்டு மலராகப் பாடியுள்ளார். மருத நிலத்து ஊர்கள் புலம் எனப்படும். புலமெல்லாம் பூத்தன தோன்றி' எனும் கண்ணங்கூத்தனார் பாடல் இப்பூ மருத நிலமெல்லாம் நிறைந் ததைக் காட்டியது. நெய்தல் நிலமாம் கடற்கரை மணல் மேடுகளில் கீழைக் கடற்கரை ஓரமாகக் காந்தள் பூப்பதை இன்றும் காண்கின்றோம். இவ்வாறு காந்தள் நானிலத்திலும் காணப்படுகின்றது. ஆயினும் இது மூலத்தால் குறிஞ்சி நிலப் பூவாகும். கார். நா : 11 அகம் : 1.64 : 6, 7, கார், நா : 26