பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425


உணவளித்த உணவு விடுதி ஒய்வெடுக்கப் படுக்கையறை யும் வழங்க வேண்டுமன்றோ? வழங்கியது. வழங்கிய இடம் தனது அடிமரத்திடந்தான். ஆனால், அது மண்தரையானாலும் மணியறையாயிற்று. அதிலமைந்த படுக்கை மெத்தென்ற அமளி. 'கமகம’ என மணங்கமழும் அமளி. தனது மெல்லிய பூக்களைச் சொரிந்து பரப்பிய படுக்கை. மென்மைக்கும் மணத்திற்கும் சொல்லவா வேண்டும்! இன்பமாகத்துயில் வருவதற்கு இனிய இசைக்கும் ஏற்பாடு செய்தது வேங்கை. பூக்களில் மொய்த்த வண்டுகள் நீலாம்புரி பாடின. திருமங்கையாழ்வார் பாடுகின்றார்: 'கடிகொள் வேங்கையின் நறுமலர் அமளியின் மணியறை மிசைவேழம் பிடியினோடுவண்டு இசைசொலத் துயில்கொளு'மாம்T வண்டு இசை சொல்லியதாம். வண்டு முகாதா? வண்டு இங்கே வந்தது ஏன்? மலரென்றிருந்தால் வண்டு வராமலோ போகும்? அதிலும் பெயர்பெற்ற வேங்கை மரம். கொத்துக் கொத்தான பூக்கள். இதனை வண்டு ஒதுக்கிவிடுமா என்ன? திருமங்கையாழ்வார் பாடியதுபோன்றே வேங்கையில் வண்டு மொய்ப்பதை, "குறுஞ்சிறைப் பறவை (சுரும்பு) வேங்கை விரி இணர் ஊதி'2 -என்றும், 'கணிநிறை வேங்கை மலர்ந்து வண்டு ஆர்க்கும் 3 -என்றும் 'விரியினர் வேங்கை வண்டுபடு கண்ணியன்' 4 -என்றும் பாடினர். முன்னரும் வண்டு வேங்கைப் பூவெனப் புலி யைச் சுற்றியதைக் கண்டோம். அதே வண்டு யானையின் முகத் LYLS LS LLS 0S AAA AAAA AAAA AAAA AAAA TYCC SSSS 0SYYS S S S S S S S 1 பெரிய திரு வாலி : 8 : 3, 4, 8 திணை ஐ : 9 8, 4. 2 அகம் :182:11, 12. 4 அகம் : 88 :1,