பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430


"இழையணி மகளிர் போலத் தோன்றும்" 1 -என்றார். தொடர்ந்து தன்பார்வையை அம்மயிலின் மேல் செலுத்தினார் போலும். அது தன் அலகால் பூக்களைக் கோதும் தோற்றத்தைப் 'பூக்கொய் மகளிரின் தோன்றும்'? - -என்றார். கொல்லன் அழிசி என்பாரும், பூக்கொய் மகளிராக'8 ம்யின்லக் கண்டார் மருதன் இளநாகனார் பார்வையில், 'குறும் பொறை அயலுறு நெடுந்தாள் வேங்கை மடமயில் குடுமியில் தோன்றி"யது 4 இது குடிசையை மயில் உடலாகவும். வேங்கைப் பூங்கொத்தை மயிற் குடுமியாக வும் கண்ட காட்சி போலும். 'பூக்கொய் மகளிரில் தோன்றும்' -என்றவர் தொடர்ந்து தன் பார்வையை விரிவாக்கிப் பறவைப்பார்வையாக்கினார். அப்பகுதி மலைகளின் சூழலைத் அப்பார்வைக்குள் வைத்தார். 'இரண்டு மலைகள் எதிர்எதிராக உள்ளன. இரண்டி னின்றும் இரண்டு அருவிகள் விழுகின்றன. இடையிலே மாணிக்க நிறப்பாறை. அதில் ஒரு பெரு வேங்கை மரம் வானளாவி நிற்கின்றது. அதிரும் அருவியின் நீர்த்துளிகள் வேங்கையின்மேல் விழுகின்றன. அவைபட்டு வேங்கை அரும்புகள் மலர்களாகின்றன’ இக்கருத்தமையப் பாடியப் பாட்டு இது: ‘'எதிர்எதிர் ஓங்கிய மால்வரை அடுக்கத்து அதிரிசை அருவிதன் அஞ்சினை மிசைவிழ, முதிர்இணர் ஊழ்கொண்டு (மலர்ந்த்) முழவுத்தாள் - எரிவேங்கை" 5 கண்ட காட்சியைக் கவிதையாக்கினார்; காட்சியின் உள்ளுறையாக இல்லறக் கருத்து ஒன்றை பொதியவைத்துள்ளார். பொதியை அவிழ்த்தால், چیستم جه 1 ஐங் : 294 : 2 4 அகம்: 868 : 6, 7 2 &#: 297 : 2 5 கனி 44 : 2- 4, 3. குது. 26: 8 -