பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/462

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
442


தோன்றும். . இயற்கையில் கொன்றை மலரின் நிறம் நல்ல மஞ்சள் நிறத்தில் பளிச்சிடும். இதனால், “.... ... ... ... ... ...கொன்றை போல மாமலை விடரகம் விளங்க மின்னி' என மின்னலுக்கு உவமை கூறினார் அவ்வையார். இம்மலர் இடியுடன் கூடிய மழையை ஏற்று மலர்ந்துள்ளபோது நிறத்தின் மங்கலாலும், நீர்த் துளி நிற்பதாலும், 'அதிர்பெயற் கெதிரிய சிதர்கொள் தண் மலர் மாண் நலம் இழந்தவென் கண் போன் றனவே'2 எனக் கண்ணிரால் அழகிழந்த கண் உவமையாயிற்று. இதன் தாதுத் துளும் முன் கண்டது போன்று பொன் தூள் போன்றது; மஞ்சள் நிறத்தது. வரகின் அரிசியால் புழுக்கிய உணவிற்கு இதனை உவமை கூறினார் மாமூலனார், - 'வரகின் அடுப்பேற்றி و موجتم هم په پ * * و په * پي இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதின் (தாதைப்போல) குடவர் புழுக்கிய பொங்கவிழ் புன்கம் (உணவு)'3 . என்பது அவர் பாட்டு, கார்காலத்தில் இப்பூ கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் தொங்கும் காட்சி கண்ணுக்கு நிறைவானது. மரமே ஒரே மஞ்சளாகத் தோன்றும்படி மரமெங்கும் பூவே நிறைந்திருக்கும். "கொன்றை வேய்ந்தான்" இதன் பொன்னிறப் பொலிவும், புதுமலர் மெருகும் கொய்து சூடிக் கொள்ள அழைக்கும். முல்லை நிலத்துக் கோவலர் சூடியும் 1 நற் : 371 : 1, 2. 3 அகம் : 898 : 5, 14, 15, 16. 2 ஐங் : 458 : 2, 9,