பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/487

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
467


"இலைகளே இல்லாமல் அனைத்து முகைகளும் மலர்ந்துள்ள இலவம் கார்த்திகை நாளில் மகளிர் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு நிறைய ஏற்றிய அழகிய சுடர்விளக்கின் நெடிய ஒழுங்காக அழகுடன் தோன் றும்” - என்றார். மலரின் புறவிதழ்க் கிண்ணம் அகல் விளக்காகவும், செவ்விய அகவிதழ் எரியும் சுடராகவும் தோன்றின. மகளிர் மகிழ்ச்சி ஆரவாரமான இரைச்சலைப்போன்று காற்றின் அலைப்பால் மரத்தில் எழுந்த பேரோசை இருந்தது. மரம் முழுதும் செம்மை மலர்களே நிறைந்திருந்த தோற்றத்தை, - "மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும் 2 - என மலை யே தீப்பிடித்தது போன்றிருந்ததாக ஒதலாந்தையார் பாடினார். தீக்காடாக மலர்ந்திருந்த இலவ மரம் ஒன்றில் தோகை மயில் ஒன்று ஏறியது. - “... ... ... - முள்ளுடை இலவம் ஏறிய கலவி மஞ்ஞை எரிபுகு மகளிர் ஏய்க்கும்’ 8 - என்றமை மலரின் மிகுதியையும் அவற்றின் தொகு நிறத்தையும் காட்டுகின்றது. அத் துடன் நெருப்பில் இறங்கிய மகளிர் என்பது உவமைப் பொருத் தத்துடன் அக்காலத்து மகளிர் கணவரை இழப்பின் எரிபுகுதலை யும் பதிவாக்குகின்றது. தீப் போலும் பூக்களைக்கொண்ட மரத்தில் பெருங்காற்று மோதுவதால் மலர்கள் சிதறித் தரையில் வீழ்வதை இடியுடன் கூடிய நெருப்பு வானத்திலிருந்து தரையில் வீழ்வது போன்றிருந்த தாகக் ஒதலாந்தையார் வண்ணித்தார். காற்றின் மோதலால் அன்றி இயற்கையாகவே வீ யாகும் மலர் ஒவ்வொன்றாகக் காம்பினின்றும் கழன்று உதிரும். இதனை, 'பெருவிழா அமைந்த பழம்பெருமையுடைய மூதூரில் ஏற்றப்பட்டுள்ள நெய் விளக்குகளிலிருந்து விழும் சுடர் போல விழும், -என்றும், 1 அகம் : 1.1 : 8.5. 3 ஐங் : மிகை 8 : 1-8. " 2 ஐங் : 338 : 2, 8. 4 ஐங் : 320 : 1-4