பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556


குறிஞ்சிக் குவியலில் இடம் பெற்றது. இருப்பை குறிஞ்சிப் பாட்டிலும் இல்லை; பத்துப் பாட்டிலும் இல்லை. எனவே, எட்டுத்தொகை தொடக்கமாக இருப்பையின் இருப்பைக்காணலாம். உள்துளையோடு சுவையையும் உடைய இருப்பையைப் பற்றிய ஒரு வரி, "கான இருப்பை வேணல் வெண் பூ' என்பது இவ் வடிவை அதன் வரலாற்றுச் சுருக்கவரி எனலாம். கானம்' என்ப தால் பாலைநிலப் பூ. இதற்கு "அத்த இருப்பைப் பூ' என்பதும் துணையாகும். வேனல்’ என்பதால் முதுவேனிலாம் கோடைப் பருவப் பூ. வெண்பூ அதன் வெண்மை நிறத்தை கூறுகின்றது. இதுபோன்று,

  • கூடு குவி வான் யூ” (அகம் : 35 : 8)

-என்பது அதன் அகவிதழ் ஒரே வார்ப்பைப் போன்று கூடிக் குவிந்திருப்பதைச் சொல்கின்றது. 'துரம்பு (துளை) உடைத்திறள் வி’ (அகம் : 95 : 7) "தொள்ளை (துளை) வான் பூ' (அகம் : 149 : 3) -என்பன அதன் உள்துளை உடைமையைச் சொல்கின்றன. அடுத்து அது பிறந்து வளர்ந்து வீழும் வாழ்வியற் பருவங் களை இளங்கீரனார் மூன்றடிகளில் தந்துள்ளார். அதற்கொரு அறிமுக உரை கூற வேண்டும். அம்புகளை இட்டுவைக்கும் குடலை "தூணி’ எனப்படும். அதற்குள் உள்ள ஒவ்வொரு அம்பிற்கும் அதன் சுனை கெடாத வாறு ஒவ்வொரு குப்பி மூடியாக இடப்பட்டிருக்கும். இக்குப்பி போன்றது இருப்பை மொட்டு. அம்பின் தலையிலுள்ள அக் குப்பியைத் திறந்தது போன்று இருப்பை மலர் தோன்றும். புல அம்புகள் தூணியில் இருப்பது போன்று பலபூக்கள் கொத்தாக மலரும். அம்மலர், காம்பிலிருந்து கழன்று செந் நிலத்தில் முத்துப் போன்று உதிரும். இவற்றை அறிவிக்கும் அடிகள் இவை 1 குறு 829 : 1.