பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/618

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
598


முருக்கின் நனை, கரும்பச்சை நிறப் புற இதழால் மூடப் பட்டது. அதனால் “கருநனை" என்றார் குன்றியனார். நனை முற்றிய அரும்பில் புறவிதழ்,கருமை குறைந்து பதுமை நிற்கும்; பாசரும்பு ஆகும். புறவிதழ் விரிந்து அகவிதழ் செம்மை யான முகை தோன்றும். இதனைச் சாத்தனார் 'பாசரும்பு என்ற செம்முகை முருக்கு” என்றார். முகை விரிந்து அகவிதழ்களின் செம்மை விளங்கும் மலரைச் "செம் பூ முருக்கு' என்றார் நெடுங்கண்ணனார். அரும்பு முதல் மலர் வரையுள்ள இதன் வடிவமைப்பிற்கும். செம்மை நிறத்திற்கும் பல உவமைகள் படிப்படியாக எழுந்தன. முேருக்கு அரும்பு அன்ன வள்ளுகிர் வயப்பின வு' எனப் புவியின் வளமான நகத்திற்கு உவமையாக்கினார் வெள்ளிவிதி பார். இதனை மாற்றியமைத்துப் "புலியின் பற்றிக்கொள்ளும் நகம் போன்ற முருக்கின் சிவந்த முகை' என்று இதன் முகை வடிவத்தைக் காட்டினார் பெருங்கடுங்கோ. முகை புலிநகத்தில் வடிவமைப்போடு சிவந்திருப்பதை எண் னிய மாற ன் பொறையனார், "உதிரத் துவரிய வேங்கை உகிர்போல் எதிரி முருக்கு அரும்ப' எனக் குருதிக்கறை படிந்த புலி நகத்தைக் காட்டினார். கொடிய வேங்கை நகத்தைக் காட்ட விரும்பாத வடமோதங்கிழார், மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்? - எனச் செவ்வண்ணம் ஆறட்டிய மகளிர் கைநகத்தைக் காட்டினார். இவையாவும் இப்பூ வி ைது வடிவமைப்பின் பதிவுகள். செக்கச் சிவந்த இம்மலரின் நிறம் உவமைகள் அடுக்கப் பெற்றது. இதன் செம்மை நெருப்புச் செம்மையாக்ப் பலரால் பாடப்பட்டது. கருவூர் நன்மார்பன் என்பார், 'பொங்கு அழல் முருக்கின் தன் குரல்" என்றார். விரிந்த அகவிதழ்கள் தியின் நாக்கு இளாகவும், சிற்றிதழ்கள் தீப்பிழம்புகளாகவும், மகரங்கள் சிதறும் திப்பொறிகளாகவும் அமைந்து 'பொங்கும் நெருப்பு மலர், 1 அகம் : 41 : 2 5 அகம் 99 : 1-8; 2 அக்ம் : 229 :16, 6 ஐந் 81. த குறு : 156 7 அகம் :317 : 3, 4 அகம் : 862 : 5, 8 அகம் : 277 ; 15-17,