பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

599


என்பதற்குப் பொருத்தமாகும். இத்தொடரை அடித்தளமாகக் கொண்டு போலும் இப்பூ மலர்ந்த காட்டை ஆங்கிலத்தில் FLAME OF FOREST என்றனர். இந் நன்மார்பனாரே இதே பாட்டில் இப்பூவிற்கு ஒர் உவமை கூறினார். சண்டைச் சேவல் பகைச்சேவலைத் தாக்கும்போது தனது கழுத்தின் இறகைச் சிவிர்த்துக்கொள்ளும், அதனைக் காட்டிச் சேவல், போர்புரி எருத்தம் (கழுத்துப் பிடரி) போலக் களுலிய பொங்கழல் முருக்கு” எனப்பட்டது. இச்சேவற் பிடரி உவமை, அடுத்து வரும் கவிர்ப் பூவுடன் நோக்குவதற்கு நினைவிற்கொள்ள வேண்டியதா பொங்கிய நெருப்பாகச் செவ்வொளி சிதறுவதுபோன்ற தோற்றத்தைக் கண்ட கணிமேதாவியார், "எரி சிதறிவிட்டன்ன ஈர்ம் முருக்கு -எனக் கணித்தார். இவர் கணிப்பில் நிறம் நெருப்பாயினும், நெருப்பின் வெம்மை இன்றி ஈரமாம் தண்மை தெரிகின்றது. பூக்கள் நிறைந்த கிளை "எரிமருள் பூஞ்சினை' எனப்பட்டது குன்றியனாரால். பூத்த முருக்க மரங்களைக்கொண்ட நீர்த்துறைக் கரை "முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை' எனப்பட்டது பாலைக் கெளதமனாரால், யானையளவில் ஒரு கரும்பாறை கிடந்தது. அதன்மேல் சிவந்த மலர் விரிந்த முருக்க மரக்கிள்ைகள் படிந்திருந்தன. கடுங்காற்று வீச்சால் செம்மலர்கள் அலைந்தன. அக்கல், அழல் பொழியானையின் ஐ எனத் தோன்றும் 4 என்றார் பெருங்கடுங் கோ. நெருப்பைப் பொழிகின்ற யானையாக 'ஐ' என்னும்ாறு வியப்பை வழங்கியதாம். - நெருப்பேயன்றி இதன் செம்மைக்கு அரக்கைக் குறித்தார் நத்தத்தனார். இதன் தனி இதழுக்குப் பவளத்தை உவமையாக் கினர் இருவர். குளத்து நீரில் இதன் சிவந்த இதழ் உதிர்ந்தது. இதனை மணிபோன்ற கண்ணாடிக்குள் பவளத்தை எறிந்தது போன்றிருந்ததாக நல்லந்துவனார் பாட, கணிமேதாவியாரோ பின்வருமாறு பவளம் பதித்த பொற்றாலி என்றார்: 1 திணை: நூ. 34 க்கம்:25:6-1. 2 அகம்:41, 3 5 சிறுபான் : 256, பதிற் 28 : 20 6 கலி :98 : 8, 4