பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630


க்ாய்ப்பது, அது வாள் அவரைக்காய்-வாள் அவரங்காய்-வாளவரங் காய், எனப்படும். அதுபோன்றே வாள்வீரமும் பெயர்பெற்றது. பரிபாடலில், மனைமாமரம் வாள் வீரம்' என வருகின்றது. இதற்குப் பரிமேலழகர் "வாள்வீரம் என்னும் மரம்; கூவிளை" என்றார். வாள்விரம் எவ்வகையிலும் கூவிளை’ என்னும் கூவிளம்’ ஆகாது. கவிரை என்பதே கூ வி ைள எனப் பாடவேறுபாடு ஆகியிருக்கலாம். பரிபாடலில் குறிக்கப்பட்ட வாள்வீரம் மலையிலிருந்து வரும் மலர்களுடன் குறிக்கப்படுகின்றது. எனவே, இது குறிஞ்சி நிலத்தது. குறிஞ்சி நிலத்துக் கோட்டுப் பூ என்பதன்றி வெறொன்றும் இம்மலர் பற்றி அறிதற்கில்லை. சொல்லால் வாள் விரத்தோடு விளங்கும் பூ, கவிரம். 44. நிணக்குடர் மலர். கனவிரம். அலர்தலை உடையது' என்னும் பொருளில் மலருக்கு காரணப் பொதுப்பெயராக அலரி என்றொரு பெயர் உண்டு. தொய் குழை அதிரல் வைகுபுலர் அலரி என அகத்தில் வரும் அலரி இத்தகையது. இச்சொல்லே காரணச் சிறப்புப் பெயராகத் தனியொரு மலரைக் குறிக்கப் பயன்பட்டது, இஃது ஒரு குற்றுச் செடி. வெள்ளை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் பூக்கும். சிவப்பு நிறச்செவ்வலரி, 'கனவிரி எனப்படும். பரிபாடல் கனவிரி" என்கின்றது. இதற்குப் பரிமேலழகர் செவ்வலரி' என்று பொருள் எழுதினார். அலரிப் பூ அடுக்குத் தொகுப்பாக அலர்வது - விரிவது கணம் (தொகுப்பு, அடுக்கு) விரி என்னும் பெயர் பொருத்தமா கின்றது. அலரிக்கு அடுக்கு என்றொரு பெயரையும் நிகண்டு கள் கூறுகின்றன. கன விரி என்பதே ஆவிரை, கூவிரை என்பது போன்று கண விரை எனப்படும். கணவிரம் என்பதும் இலக்கியப் பெயர். திருமுருகாற்றுப்படையில் வரும் கனவிரம்’ என்பதற்கு நச்சர் 2 սյf : 11 : 20