பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/671

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
651


"குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் (நடு இரவு) புன்கொடி மு சுண்டைப் பொறிப்புற வான்பூ பொன்போற் பிரமொடு புதல்புதல் மலர' - என்றார் நக்கீரர். எனவே, இது கூதிர்ப் பருவப் பூ. அப்பருவத்தில் நடு யாமத்தில் மலர்வது. புதர்களில் மலரும். வீட்டு முற்றத்திலும் மலரும்.? கூதிர்ப்பருவத்தில் வானம் மழைபெய்து நின்று தெளிந் திருக்கும்போது விண்மீன்கள் பளிச்சென்று தெரிவதுபோன்று இப்பூ பூக்கும் என்பதை இளங்கண்ணனார், 'மழையில் வானம் மீன் அணிந்தன்ன குழையமல் முசுண்டை வாலிய மலா” என்றார். பூக்கள் தொடர்பாகப் பூத்ததைக் கண்ட பெருங்கெளசிகனார், "அக விரு விசும்பின் ஆஅல் (ஆரல்) ோல வாலி தின் விரிந்த புன்கொடி முசுண்டை 'ச -ான ஆரல் என்னும் கார்த்திகை விண்மீனாகப் பாடினார். இப் பூ புறத்தே திரண்டதாக ஒரளவில் நாற்கோணக் குவிவாகத் தோன்றும். பனையோலையால் முடையப்படும் சிறு பெட்டிபோன்ற கூடையைக் கொட்டான்' என்பர். இப் பூ சிறிய தாயினும் வடிவமைப்பில் கொட்டான் போன்றுள்ளதால் நத்தத்தனார், கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்' எனப் பாடினார். எனவே, இதனைக் கொட்டான் மலர்' எனலாம். முசுண்டை முல்லையுடனும் முஞ்ஞையுடனும் பிற முல்லை நிலப் பூக்களுடனும் பேசப்படும். பெருங்கதையிலும் உதயணன் காந்தருவதத்தையைக் களிற்றின்மேல் ஏற்றிக்கொண்டு முல்லை நிலத்ததைக் கடந்தான்? என்னும் வண்ணனையில் இப் பூ இடம்பெற்றுள்ளது. எனவே, முசுண்டை முல்லைநில மலர். குறுநில மன்னன் ஒருவன் முசுண்டை என இப்பூவாற் பெயர் பெற்றுள்ளான். இப்பூவிற்கு இஃதொரு சிறப்பு. அவனது ஊர் 'வேம்பி’ என்பது. இதனை நாக்கீரனார், பல்வேல் முசுண்டை வேம்பி' எனப்பாடியுள்ளார். 1 நெடு: வா 12-14. 5 சிறுபாண் : 166 2 புறம் : 20 1-3. 6 மது. கா , 281, 3 அகம்: 284 1, 2. 7 பெருங் : உஞ்சை : 49 , 11-118, 4 மலை , 100, 101. 8 அகம் : 249 : 9.