பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/679

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62. சடைநிறத் தளிர் மலர்.

தில்லை.

தில்ல மரக்காடு தில்லை நகராகியது. அங்கே சிற்றம்பலம் தோன்றிச் சிதம்பரம் வந்தது. . 'தில்லையோடு ஒருங்குடன் காணல் அணிந்த உயர் மணல் எக்கர்’ (கவி ; 133 : 1, 2.) "தண் தில்லை கலந்து கழி சூழ்ந்த” (திணை. நூ. 61) - என்பன இதன் நெய்தல் நில இருப்பைக் காட்டுகின்றன, 'கண்டல் வேலி' என்றது போன்று தில்லை வேலி இவ்வூர்" என இஃதும் வேலியாக அமைந்தது. நீர்நாய் கொழுத்த மீனைச் சுவைத்துத் தில்லையம் பொதும்பில் பள்ளி கொண்டதாம். 2 இம்மரத் தளிர் மங்கிய செம்மை நிறங்கொண்டது. இதனை மாற்பித்தியார் என்பார் மாணியின் செம்பட்டைச் சடைநிறத்திற்கு உவமை கூறினார். 8 - இதன் பூ சிறியது. கொத்தாகப் பூக்கும். சந்தன மஞ்சள் நிறத்தது. நெய்தல் நிலத்துக் கோட்டுப் பூ. முன்பணிப்பருவத்தது. குறிஞ்சிப் பாட்டுப் பூ. 4 புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்) என்பார் கூத்தரசனைப் போற்றி வழிபட விடியற் பணியில் நகம்பற்றியேறி இம்மலரைக் கொய்ததாகக் கோயிற் புராணம் கூறும். இது பால் வடியும் மரம். இ கற்றின் தொடர்பில் போலும் இதனை ஆங்கிலத்தில் புலியின் பால் மரம் (TiGER S Mik TREE) என்றனர். வில்வம் என்றது. போன்று தில்வம்' என்றொரு பெயர் இதற்குண்டு. இஃதும் சைவத் தொடர்பில் உண்டானதாகலாம். 63. செம்பொட்டு மலர். . பலாசு. பலாசுபற்றிய உறுதியான விளக்கத்தை நிகண்டுகள் தர வில்லை. பிங்கலம் இதனைப் புரசு என்றதுடன் புனமுருக்காகவும் குறித்தது. சூடாமணி நிகண்டு புனமுருக்கோடு நிறுத்தியது. நச்சரோ புழகைப் புனமுருக்கென்றார். பலாசத்தைப் பலாசம் 1 ஜங் 131. 4 5 ở, ur : 77. 2 நற்: 195 : 2-4. பிங், 2861, 2882. & புறம்:25:11, 2.