பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

729


3. வரகுச் சோறு மலர்.

பூள்ை.

இலவம் பஞ்சையும் செடியினம் ஒன்றையும் குறிக்கும் பெயர் பூளை. இப்பெயர் இவ்விரு பொருள்களிலும் சங்கப்பாடல்களில் ஆட்சிபெற்றுள்ளது. "... ... ... ... வெருகின் பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை"1 - என்றது பூனைக் குட்டியின் உடல் மயிர்க்கு உவமையானமையால் இங்கு பஞ்சுப் பொருள். "நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன குறுந்தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி (சோறு) 2 - என்றதில் பூ குறிப்பிடப் பட்டுள்ளது. இங்கு செடிப் பொருள். இவ்வடிகள் பூளைப் பூவினைப் பேசுகின்றன. பூளைப் பூ நீண்டக் கொத்தானது. வரகு அரிசியின் புழுக்கலாகிய சோறு வடிவினது. அது வெந்த சோற்றின் மங்கிய வெண்மை நிறங் கொண்டது. - 'பொருப்பின் கணவாயும் புதலும் பூளை' - என்றதன் படி இஃதொரு சிறு புதர்ச்செடி. எனவே, இப்பூ நிலப்பூ 'கோடைப் பூளை' 4 என்றதற்கேற்ப வேனிற் பருவப் பூ. 'பூளை நீடிய வெருவரு பறந்தலை என்றதன்படி பாலை நிலப் பூ. "வளிமுனைப் பூளையின் ஒய்யென அலறிய" என்னும் கல்லாடனார் அடி காற்றில் பஞ்சு பறப்பதற்கும், பூளைப் பூ வதங்குவதற்கும் பொருந்தும். பூளைப் பூ இவ்வாறு காற்றால் வாடி வதங்கிக் குழைவதையே கம்பரும் ".... ... ... ... வாடை வீறிய பொழுது பூளை வியென விவன்' என்று பாடி னார். காற்றின் தாக்குதலால் விரைந்து அழிவதைக் கொண்டே சேக்கிழாரும் 'பூளைப்பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழிய' 8 என்று 1 அகம் : 297 : 13, 14 5 புறம் : 28 : 20 2 பெரும்பான் : 192, 193 6 அகம் : 199 1 10 8 பிங், நி : 3886 1 கம்ப. சடாயு : 61 4 அகம் 1317 8 பெரி, பு திருநாளை ?!