20
இலக்கிய அமுதம்
தனர். அதனைக் கேள்வியுற்ற பாண்டியன் மிக்க, சீற்றம் கொண்டான். அவ் வேந்தர் பெருமான் தனது அவைக் களத்தில் இருந்தோரைப் பார்த்து,
"பகை வேந்தர் ஒன்று சேர்ந்து என்ளுேடு, போர் புரிவதாகச் சொல்லுகின்றனர். அவர்கள் மிக்க படையை யுடையவர்கள்; சிங்கம் போலச் சினந்து புறங்கொடாத மன வலிமை யுடையவர் கள், கடும்போரில் நான் அவர்களை வெல்வேன். அங்ங்ணம் நான் அவர்களை வெல்லேனயின், என் மனைவியைவிட்டு நான் பிரிந்தவன் ஆகக் கடவேன். அறநெறி மாறுபடாத அறங்கூற விையத் தில் அறநெறி அறியாத ஒருவன வைத்து நீதி பிழைக்கச் செய்த கொடியவன் ஆகுக. மாவன, ஆந்தை, அந்துவன், சாத்தன், ஆதன், அழிசி. இயக்கன் என்பவரும் பிறருமாதிய என் உயிர் நண் பரை விட்டும், பல உயிர்களையும் பாதுகாக்கும் அரசர் குலத்தில் பிறவாதும் மாறிப்பிறப்பேனுகுக,” என்று சூள் உரைத்தான். -
இச் சூளுரையிலிருந்து நாம் பாண்டியனைப் பற்றி அறிவன யாவை? (1) இப் பெருமகன் தன் மன்ைவி மீது நீங்காத அன்புடையவன்-அவளை விட்டுப் பிரிய மனமில்லாதவன் என்பன நன்கு புலனுகின்றன.
(2) அறுங்கூறவையத்தில் அறநெறி தெரிந்த சான்ருேரே இருந்து வழக்குகளை விசாரித்து முறை வழங்குதல் வேண்டும். இதற்கு மாருக, அறநெறி. த்ெரியாத ஒருவனை நீதிபதியாக வைத்து நீதி வழங் கச் செய்தில் குடி மக்கட்குத் துரோகம் செய்வ. தாகும். அந்நிலையில் அரசன் கொடுங்கோலன் என்று கருதப்படுவான் என்பன காவலன் கருத்துக் கள் என்பது நன்கு விளங்குகின்றது.
(3) உயிரொத்த சிறந்த நண்பர்களை விட்டுப் பிரிதலும், உயிர்களைப் பாதுகாக்கும் அரச பரம்பரை யிலிருந்து ஒருவன் மாறிப் பிறத்தலும் கொடிய,