உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறுமையிலும் மான உணர்ச்சி

25


பைந்தமிழைப் பாங்குறக் கற்றவர், கவி பாடும் ஆற் றல் மிக்கவர்; ஒழுக்கத்தில் விழுப்பமுள்ளவர். அப் பெருமாட்டியார் தகடுரை ஆண்ட அதியமானது கொடைத் திறனைக் கேள்வியுற்ருர், அவனது நட்பைப் பெற விரும்பித் தகடூரை அடைந்தார்.

அதியமான் ஒளவையாரோடு அளவளாவினன்; அவரது பெரும் புலமையை நன்கு அறிந்தான். யினும் பரிசு கொடுப்பின் அவர் தம்மைவிட்டு நீங்குவர் என்ற எண்ணத்தால் பரிசில் கொடாது நீட்டித்தான். இந்த உண்மையை ஒளவையார் அறியார். "நாம் வந்து சில நாட்களாகியும், மன்னன் நமது புலமையை நன்கு சோதித்து அறிந் தான். ஆயினும் இன்னும் பரிசில் தரவில்லையே! இவன் நம்மை மதிக்கும் திறம் இதுதானு?” என்று ஒளவையார் எண்ணி மனம் விருந்தினர்; அவன் 'உண்மையாகவே தம்மை மதிக்க வில்லை என்று எண்ணிக் கொண்டார். அவ்வளவில் அவருக்கு எல்லை யில்லாத சீற்றம் உண்டானது. அவர் உடனே தம் பொருள்களை ஒரு முட்டையாகக் கட்டி ளுர்; அதை எடுத்துக்கொண்டு அரண்மனையின் வெளிவாயிலை அடைந்தார். அங்கு வாயிற் காவலன் நின்றுகொண்டிருந்தான், சீற்றம் மிகுந்த ஒளவை யார் அவ் வாயிற் காவலனை உறுத்து ந்ோக்கி,

“வாயிற்காவலனே, வள்ளல்களை நாடி வரும் நுண்ணறிவு மிகுந்த புலவர் அடையாத வாயிலைக் க்ாக்கும் காவலேர்ய், நின் கொற்றவனுகிய நெடுமா னஞ்சி தன் தகுதியை அறியாதவளு? ஏன் தகுதி |யையும் அறியாதவளுய் எனக்குப் புரிசில் தராது காலங், கடத்திவிட்டான். இவன் தராவிடின் உலகில் வேறு வள்ளல்கள் இல்ல்ையா? இத் தமிழகம் வள் ளல்களே அற்ற பாலைவனம் ஆகி விட்டதா? கோடரி கொண்டு செல்லுவோர்க்குக் காட்டில் விற குப் பஞ்சமா ஏற்படும்? என் போன்ற புலவர்க்கு எப்பக்கம் சென்ருலும் சோறு கிடைப்பது உறுதி"

(புறநானூறு 208)