பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இலக்கிய அமுதம்


புனைவதில் வல்லவர். வழக்கம்போல் இவரையும் வறுமை வாட்டத் தொடங்கியது. அதனுல் இவர் கோடை என்னும் மலைப் பகுதியை ஆண்ட கடிய நெடுவேட்டுவன் என்பவனிடம் சென்ருர், வேடர் கள் தலைவனை அத்தலைவன் இன்றுள்ள கோடைக் கானல் என்னும் மலைப் பகுதிக்குத் தலைவனுக இருந்தான். இவன் தன்னைச் சார்ந்தவர்க்கு உத விப் பகைவரை அழிக்கும் வன்மை உடையவன்.

புலவர் வேட்டுவர் தலைவனைக் கண்டு தம் புல மையைச் செய்யுள் வாயிலாக உணர்த்தினர். அவன் எக் காரணங் கொண்டோ பரிசில் கொடுக்கத் தாம தம் செய்தான். புலவர் வருத்தமும் சினமும் பொங்க அவனைப் பார்த்து,

“முல்லைக் கொடிகளை வேலியாக உடைய கோடை மலைத் தலைவனே, சினம் மிக்க நாயையும் வலிய வில்லையும் உடைய வேடர் தலைவனே, நிறைந்த செல்வத்தையுடைய சேர சோழ பாண்டிய ராயினும் எம்மை மதியாமல் கொடுப்பதை நர்ங்கள் விரும்போம். கடலை நோக்கிச் செல்லும் வெண் மேகம் கடல் நீரை முகவாமல் திரும்புவதில்லை. அது போலவே வள்ளல்களை நரடிச் செல்லும் புல வர் கூட்டம் யானையைப் பரிசிலாகப் பெருது மீள்வ தில்லை,” செ. 205

என்று புலவர் அழுத்தம் திருத்தமாக அறைந் துள்ளது கவனிக்கத் தக்கது.

முடிவுரை

இதுகாறும் கண்ட சான்றுகளால், சங்க காலப் புலவர் வறுமைக் காலத்திலும் மான உணர்ச்சி மிக்க வர் என்பதும், தம்மை அவமதிப்பவர் வேந்தராயி .ணும் அஞ்சாது அவர்முன் எதிர்நின்று இடித்துரைப் பவர் என்பதும், தம்மை மதியாதவரை மதிக்கவைக் கும் திறனுடையவர் என்பதும் நன்கு புலப்படுகின் றன அல்லவா?