இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
இலக்கிய அமுதம்
வாழ்வரசியாகப் போகும் பெண்ணை வாழ்த்தி நீராட்டுதல் வரவேற்கத் தக்கதே. இந்த இரண்டு திருமணங்களிலும் முதல் நிகழ்ச்சியாக விருந்துண் ணல் கூறப்பட்டுள்ளது. எல்லோரும் உண்டு மன மகிழ்சியோடு வாழ்த்துக் கூறுதல் நல்லதுதானே!
இவ்விரண்டு திருமண முறைகளையும் படித்துத் தெளிந்த வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி. டி. சீநிவாச ஐயங்கார் அவர்கள், "இவ்விரு திருமண முறைகளிலும் எரிவளர்த்தல் இல்லை; தீவலம் வருதல் இல்லை; தட்சினைப் பெறப் புரோகிதர் இல்லை. இவை முற்றும் தமிழர்க்கே உரியவை' என்று கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.