உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர் வரலாறு

79


சர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் தங்கள் குறு நாடுகளை ஆண்டுவந்ததுடன் பேரரசனுக்குக் கப்பங் கட்டியும் பன்ட உதவி செய்தும் வந்தனர்.

அரசியல்

கிராம ஆட்சி அரசியலின் முதுகெலும்பாய் இருந்தது. சோழப்பெருநாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட்டிருந்தது. சோழப் பேரரசனுடைய மக் களும் நெருங்கிய உறவினரும் மண்டலத்தலைவராகப். பணியாற்றினர், புதியனவாக வெல்லப்பட்ட நாடு களில் அமைதிகாக்க நிலைப்படைகள் நிறுவப்பட்டன. விற்படை, வாட்படை, ஈட்டிப்படை எனப்பட்ட காலாட்படையும், குதிரைப்படை, யானைப்படை, கப்பற்படை முதலியனவும் சோழப் பெரு நாட்டைக் காத்து வந்தன. சோழவேந்தர் பட்டத்திற்குரிய தம் புதல்வர்க்கு உரிய பருவத்தில் இளவரசுப் பட்டம் கட்டி, அவர்களை அரசியலிலும் போரிலும் பழக்கி வந்தனர். அமைச்சர், தானத்தலைவர், குறுநில மன் னர்,நாட்டுப் பெருமக்கள், அரசாங்க உயர் அலுவலர் முதலியோர் கொண்ட குழு உடன் கூட்டம்' எனப் பட்டது. இவ்வதிகாரிகளைக் கலந்தே அரசன் எதனையும் செய்வது வழக்கம். நில அளவை அதி காரிகள், வரிவாங்குவோர், வரியைப் பலவாறு பிரிப் பவர், பொருட்காப்பாளர், கோயில்களை மேற்பார்க், கும் அதிகாரி எனச் சோழர் அரசியலில் பலதுறை. களையும் சேர்ந்த உயர் அலுவலர் பலர் இருந்தனர். அரசியல் அதிகாரிகளுக்குச் சோழப் பேரரசர் மூவேந்த வேளான், காலிங்கராயன், கச்சிராயன், சேதிராயன் முதலிய பட்டங்களை வழங்கிச் சிறப் பித்தனர். நிலவரியும், தொழில்வரியும், பிறவகை வரிகளும் அக்காலத்தில் இருந்தன. கடன், கூலி, இறை, பாட்டம், பூட்சி, உல்கு, காணம் முதலியன அக்கால வரிகளை உணர்த்தும் சொற்கள்.

சோழப்பெருநாடு முழுவதும் சோழ அரசர்கள் காலத்தில் நன்கு அளக்கப்பட்டது. பலவகைக்