பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச்சந்தன் அமைச்சன் 103. வுரையும் கூறி, மயிற்பொறியில் ஏற்றி அவளை அனுப் பினுன். பின்னர்த் தனது உடைவாளை உருவிப் பெருநகை செய்தவனுய் மாளிகையினின்று வெளிப் போந்தான். எதிர்ப்பட்டார் அனைவரையும் தன் வாளுக்கு இரையாக்கினன். இறுதியில் தானும் பகை வனது வாளுக்கு இரையாகித் தரையில் விழுந்தான். மன்னன் மறைவு இங்ஙனம் சச்சந்தன், கட்டியங்காரல்ை பட் டொழிந்த செயலை ஆசிரியர் கூறுங்கால், அவனுடைய குலப்பெருமையையும் அறச் செங்கோன்மையையும் பாராட்டி, ஆய்ந்த குருகுலமாம் ஆழ்கடலி னுள்முளேத்த அறச்செங்கோல் ஆய்க திரினே வேந்தர் பெருமானைச் சச்சந்தனே மந்திரிமா நாகமுடன் விழுங்கிற் றன்றே.' என்று கழிவிரக்கப்படுகின்ருர், வாளால் வெட்டுண்டு வீழ்ந்து கிடந்த வேந்தனைக் கண்டு கட்டியங்காரன் கண்ணிருகுத்துக் கைதொழுது நின்றன். அச் சமயத் தில் சச்சந்தன் தன்பால் கொண்டிருந்த பேரன்பும் பெருமதிப்பும் நம்பிக்கையும் அவன் உள்ளத்தில் தோன்றி உறுத்தியிருக்கவேண்டும். இன்றேல் தன்னைக் காணும் மக்கள் 'அரசன்பால் இத்துணை அன்புடை யான் அவனை அழித்தற்குத் தக்கதொரு காரணம் இருத்தல்வேண்டும் ' என்று எண்ணி அமைந்தொழு குவர் என நினைந்திருக்கவேண்டும். மன்னன் இறந்த செய்தியை அறிந்த நகரமக்கள் மாருத் துயரத்தால் ஆருகக் கண்ணிரைப் பெருக்கினர். கட்டியங்காரன், தானே இனி அரசன் என்று பறை