பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அருண்மொழித்தேவர் 109 நூல் சொல்நயம் பொருள்நயங்களால் தன்னேரில் லாத காவியமாகத் தழைத்தோங்கும் சிறப்புடையது. மங்கலமல்லாத சொற்களே மருவாத வண்ணம் அருள் மணம் கமழ ஆக்கப்பெற்ற பெருமையுடையது. பெரிய புராணம் தமிழக வரலாறு வரலாற்று ஆசிரியர்கள் கி. பி. நான்காம் நூற் ருண்டு முதல் ஏழாம் நூற்ருண்டின் தொடக்கம் வரையுள்ள முந்நூறு ஆண்டுகளில் தமிழகம் இருந்த நிலையை அறிந்து கொள்ளச் சிறந்த சாதனம் ஏதும் இல்லாமையால் அக்காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம்’ என்று இயம்புவர். அவ் இருண்ட கால வரலாற்றை விளக்கும் கலங்கரை விளக்கமாகத் தோன்றிய சிறந்த நூல் பெரியபுராணமாகும். மேலும் தமிழகத்தின் ஐந்நூறு ஆண்டுச் சரிதத்தை அறிதற்குப் பெருந்துணை செய்வது இந்நூல் என்பர் அறிஞர். சைவசமயத்தின் தெய்வ மாண்பினைத் தெரிக்க வந்த நூலாயினும் காவிய நலமும் வரலாற்று நுட்பமும் கனிந்தொழுகும் இந்நூலை எச்சமயத்தவரும் விரும்பிக் கற்பர். சேக்கிழார் புராண ஆசிரியர் இத்தகைய இனிய அரிய அருள்நூலை இயற்றி யருளிய ஆசிரியர் தெய்வப் புலமைச் சேக்கிழாராவர். இவருடைய பிள்ளைத் திருப்பெயரே அருண்மொழித் தேவர் என்பது. இவர் சோழ நாட்டை யாண்ட இரண்டாம் குலோத்துங்களுகிய அநபாயனுக்கு முதல மைச்சராக விளங்கிய மூதறிவாளர். இவருடைய வரலாற்றைக் கொற்றவன்குடி உமாபதி சிவனர்