பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அருண்மொழித்தேவர் 115 உனது அடியர்சீர் அடியேன் உரைத்திட அடி எடுத்து இடர்கெடத் தருவாய், என்று திருவருளை வழுத்தி வணங்கினர். அவ்வேளையில் அம்பலக்கூத்தன் திரு வருளால் உலகெலாம் என்ற ஒலியொன்று பேரொலி யாக வான்ரில் எழுந்தது. அவ் ஒலியினைக் கேட்டு எல்லோரும் உச்சிமேல் கரங்களைக் குவித்து வணங்கிய வராய் உள்ளம் உருகினர். அன்றுமுதல் அமைச்சராகிய அருண்மொழித் தேவர் ,சிவக்கோலம் தாங்கி ஆங்குள்ள ஆயிரக்கால் மண்டபத்தில் அமர்ந்து திருத்தொண்டர் புராணத்தைப். பாடத் தொடங்கினர். சின்னுளில் புராணம் நிறை வெய்தியது. தில்லையில் அருண்மொழித்தேவர் ஆற்றி வரும் பணியினை ஒற்றர் வாயிலாகவும் தூதர் வாயி லாகவும் இடையிடையே தெரிந்து இன்புற்ற அந பாயன், புராணம் நிறைவெய்திய நற்செய்தி கேட்டுப் பெருமகிழ்ச்சியுடன் படைகள் புடைசூழத் தில்லையை அடைந்தான். பொன்னம்பலக் கூத்தன் முன்னர் விழுந்து பணிந்தான். அப்பொழுது எல்லோரும் கேட்க வானில் ஓர் ஓசை எழுந்தது. பெரியபுராண அரங்கேற்றம் இச் சேக்கிழான் நம் தொண்டர்களின் சிறப்பை, நாம் உலகெலாம் ' என்று அடியெடுத்துக் கொடுக்க, அதனையே தொடக்கமாகக் கொண்டு நூலைச் செய்து முடித்துள்ளான். நீ அதனைக் கேட்பாய்." என்று ஊக்கமான திருவாக்கொன்று இறைவன் திருச்சிலம் பொலியுடன் வானில் எழுந்தது. அது கேட்ட அநபாயன், அருண்மொழித்தேவர் விரித்துரைத்த தொண்டர் வரலாற்றைக் கேட்பதற்கு