பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இலக்கிய அமைச்சர்கள் வேண்டிய மதியமைச்சன் அது செய்ய அஞ்சித் தன் னுயிரையே போக்கிக்கொண்ட வரலாற்றைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். வேந்துமகன் தேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான் சோர்ந்துதன(து) ஆவிவிட்டான் சோமோசா-ஆய்ங் துணர்ந்தோர் தன்னுயிர் ப்ேபினும் செய்யற்க தான்பிறி(து) இன்னுயிர் நீக்கும் வினே. என்பது முனிவர் அருளிய பாடலாகும். இளங்கோ வழங்கும் பாராட்டு கற்பரசியாகிய கண்ணகியின் வாயிலாகப் புகார் நகரின் சிறப்பைப் புலப்படுத்த எண்ணிய இளங்கோ வடிகள், மைந்தனை முறைசெய்த மனுவேந்தன் ஆண்ட மாட்சியுடைய நகரம் புகார் என்று புகன்றருளி ஞர்.

  • வாயில் கடைமணி நடுகா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனே ஆழியின் மடித்தோன் பெரும் பெயர்ப் புகார்.' என்பது இளங்கோவடிகளின் இனிய வாக்கு.