பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. அதியமான் மதியமைச்சர் அஞ்சியின் அருமை கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் எழுவருள்ளே ஒருவன் அதியமான் நெடுமான் அஞ்சி என்பான். அவன் அதியர் என்னும் குறுநில மன்னர் குடியில் பிறந்த சிறந்த அரசன். அவன் தனது வீரத் தாலும் ஈகையாலும் இணையற்று விளங்கின்ை. அதல்ை அதியர் குடிப்புகழ் சிறப்புற்று ஓங்கியது. அவ்வாறு தன் குடிப்பெருமையைப் பெருக்கிய அதிய மானை அதியமான் நெடுமான் என்று புலவர் பலரும் போற்றினர். அவனது இயற்பெயர் அஞ்சி என்பதே. அதியர் பெருமை சேலம் மாவட்டத்தில் இற்றை நாளில் தர்மபுரி என்று வழங்கும் தகடுரைத் தலைநகராகக் கொண்டு அதியர் என்னும் அரச மரபினர் ஆண்டு வந்தனர். அவர்கள் சேர மன்னரோடு உறவுபூண்டு ஒழுகுபவர் ஆதலின் அச் சேரர்க்கு உரிய பனம் பூ மாலையையே தாமும் மாலையாகப் புனைந்து கொள்வர் பெறுதற் கரிய இனிமை வாய்ந்த கரும்பைப் பிறநாட்டினின்றும் முதன் முதல் தமிழகத்திற்குக் கொண்டு வந்தோர் இவ் அதியரே. கொல்லிக்கூற்றமும் கு திரை மலையும் இவருக்கு உரியனவாய் இருந்தன. இத்தகைய பெருமை மிக்க அதியர் மரபிலே பிறந்த அஞ்சி எவர்க்கும் அஞ்சாத ஆண்மையுடையான். இவனுக்கு எழினி என்ற மற்ருெரு பெயரும் வழங்கும். இவனைப் பாடிய புலவர் பலராயினும், பாரியைப் பாடிய