பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இலக்கிய அமைச்சர்கள் சிதையுமாறு மிதித்தோடும் குதிரைப் படையினைப் பெரிதும் படைத்தவன். பகைவரை வெட்டி வெட்டிப் கூர்மை மழுங்கின வாளையும், குத்திக்குத்திக் கோடும் நுதியும் சிதைந்து செப்பனிடப் பெற்ற வேலையும் தாங்கிய வீரர்கள் கடல்போல் பரந்து காணப்படுவர். அவ் வீரர்கள் அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் அரவினையொத்த ஆற்றல் படைத்தவர். இத்தகு பெரும் படையினைப் பணி கொள்ளும் பேராற் றல் படைத்தவன் அதியமான் ஆதலால் பகைவர் களே! அதியமான் இளையன், எளியன் என்று இகழன் மின் அவளுேடு போரிட்டு வெல்லுவோம் என்று நினையன்மின் ! உங்கள் நாடும் நகரும் உங்களுக்கே உரியனவாக இருக்க விரும்பின், அவன் வேண்டும் திறை கொடுத்து உய்ம்மின் மறுப்பின் அவன்விடான். நான் கூறும் இந் நல்லுரைகளைக் கேட்டு நடவீராயின் நீவிர் நுந்தம் உரிமை மகளிரைப் பிரிந்து உயர்ந்தோர் உலகம் புகுவது உறுதி. அதியமானுக்கு அறிவுரை இவ்வாறு அதியமான் பகைவர்க்கு அறிவுரை கூறிய ஒளவையார் அவ் அதியமானுக்கும் அறிவுரை கூறத் தவறினரல்லர். ' அரும்போர் வல்ல அதிய ! வலிமிக்க புலியொன்று சீறி எழுந்தால் அதனை எதிர்த்துத் தாக்கவல்ல மான்கூட்டம் இம்மாநிலத்தில் உண்டோ? கதிரவன் வானில் செங்கதிர் பரப்பி எழுந்த பின்னர் இருள் நீங்காது நிற்பதுண்டோ? பாரும் அச்சும் ஒன்ருேடொன்று உராயுமாறு மிக்க பாரத்தை ஏற்றிய வண்டி மணலில் ஆழப் புதைந்த வழியும் அப் பாரம் கண்டுகலங்காது, மணல் பரக்கவும்