பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. அமைச்சர் குலச்சிறையார் தமிழ் வளர்த்த தண்பாண்டி நாட்டை மதுரைமா நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர் களுள் ஒருவன் நெடுமாறன் என்பான். இவன் மாற வர்மன் என்னும் பட்டம் புனைந்தவன். இவனைச் சுந்தரபாண்டியன் எனவும், கூன்.பாண்டியன் எனவும் புராண நூல்கள் குறிக்கும். சைவ சமய குரவருள் ஒருவ ராகிய சுந்தரர், இவனை, ' கிறைக்கொண்ட சிங்தையால் நெல்வேலி வென்ற கின்றசீர் நெடுமாறன்’ என்று பாராட்டியுள்ளார். கூன்.பாண்டியன் அமைச்சர் குலச்சிறையார் இத்தகைய பாண்டிய மன்னனுக்குமதியமைச்சராக விளங்கியவரே குலச்சிறையார் என்பவர். சைவம் காத்த தெய்வ நங்கையாராகிய மங்கையர்க்கரசியாரைத் தன் பெருந்தேவியாகப் பெறும் பேறுபெற்ற மன்னனுகிய மாறனுக்குக் கண்ணென விளங்கிய கலைவல்ல அமைச்சர் குலச்சிறையார் ஆவர். குடிச்சிறப்பும் குணப் பெருக்கும் நுண்ணறிவும் நூலறிவும் பணிவும் கனிவும் துணிவுமாய பண்பெல்லாம் ஒருங்கமைந்த நல்லமைச்சர் அருந்துணையால் மாறன் நாட்டை நன்கு புரந்து வந்தான். அந்நாளில் வடநாட்டி லிருந்து எண்ணுயிரம் சமணர் தென்னுடு புகுந்தனர். அவர்கள் அனைவரும் மதுரைமாநகரை அடைந்து பாண்டிய மன்னனைச் சரண் புகுந்தனர். அவர்களை யெல்லாம் பாண்டியன் தன் நகரைச் சூழ்ந்துள்ள