பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் வாதஆரர் 75 வளமான தடங்கரையில் அமைந்தது வாதவூர். அது மாணிக்கவாசகர் அவதரித்தருளும் தவப்பேறுடைமை யால் திருவாதவூர் என்று சிறப்பிக்கும் பெருமை யுற்றது. வாதவூரர் அவதாரம் ஒருவாத புகழ் படைத்த திருவாதவூரில் சிவநெறி பிறழாச் சிந்தையாளராகிய அந்தணுளர் ஒருவருக்கு அரும் பெறல் மகவாய் அவதரித்தவர் வாதவூரர். இவ ரது அவதாரத்தைப் பற்றிக் கூறவந்த கடவுண் மாமுனிவர், பொய்யான உலகில் சூழும் அஞ்ஞான இருள் அகலுமாறும், அவ் இருளில் மூழ்கி ஆழ்நரகில் வீழும் பரசமயங்களாகிய விண்மீன்கள் ஒளிமழுங்கவும், சிவனடியார்களுடைய உள்ளத்தாமரைகள் எல்லாம் ஒளிபெற்று மலரவும் வாதவூரர் ஞானக்கதிரவனுய் ஞாலத்து உதித்தருளினர் என்று உரைத்தருளினர். பொய்ம்மையாம் உலகின் மாயப் பொங்கிருள் அகல அன்னேர் தம்மையாழ் காகில் தள்ளும் சமயதா ரகைம முங்க எம்மையா ளுடையான் அன்பர் இதயதா மரைகள் எல்லாம் செம்மையாய் மலர ஞான தினகரர் உதயம் செய்தார்.' என்பது அம்முனிவர் அருளிய கவிதையாகும். வாதவூரர் கலையறிவும் அமைச்சுரிமையும் ஞானக் கதிரவனுய் உதித்தருளிய வாதவூரர் இளம் பருவத்திலேயே கருவி நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள் முதலியவற்றை ஐயந்திரிபறக் கற்றுத் தெளிந்த அறிவுடையரானர். பதினறு ஆண்டிற்குள்