பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் வாதஆார் 8|| யில் கல்லேற்றி அல்லற் படுத்தினன். வாதவூரர் அத் துன்பத்தையெல்லாம் பொறுத்தார். இறைவன் அச் செயலை வெறுத்தார். வாதவூரர் மாண்பினை வையம் அறியுமாறு செய்ய விரும்பினர். வையையாற்றில் வெள் ளம் பெருகி வருமாறு திருவுளம் பற்றினர். அவ் வெள்ளப் பெருக்கால் மதுரை அழியுமோ என்று எல் லோரும் அஞ்சினர். அரசன் வீட்டிற்கொருவராகக் சென்று கரையை அடைக்குமாறு கட்டளையிட்டான். வந்தியின் கூலியாளாக இறைவன் வருதல் மதுரையில் வாழ்ந்த நரை மூதாட்டியாகிய வந்தி யின் பங்கை அடைப்பதற்கு ஆளில்லை. இறைவனே வந்தியின் கூலியாளாக வந்து அவள் தந்த பிட்டமுதை உண்டு கரையடைப்பார்போல நடித்து மரநிழலில் படுத்துறங்கினர். அது கண்டு சினங்கொண்ட மன் னன் கைப் பிரம்பால் கூலியாளாக வந்த இறைவன் முதுகில் அடித்தான். அவ் அடி சராசரப் பொருள்கள் அனைத்தின்மேலும் பட்டது. அப்பொழுதுதான் மன் னன் வாதவூரர் மாண்பினை அறிந்தான். அவரைப் பணிந்து மன்னித்தருள வேண்டினன். அவ்விடத் திலேயே வாதவூரர் அமைச்சியலைத் துறந்து வெளிப் போந்தார். வாதவூரர் தில்லை சேருதல் அன்றுமுதல் வா த வூ ரர் திருப்பெருந்துறை, திருவுத்தரகோசமங்கை, திருவாரூர், திருவிடைமருதூர் முதலிய சிவத்தலங்களை வணங்கிப் பதிகங்கள் பாடிக் கொண்டே தில்லையை அடைந்தார். அங்கு நாள் தோறும் அம்பலக் கூத்தனை வழிபட்டுத் திருமடமொன் నీళ్ళ gg*gಗಿàಅಸಿ: அந்நர்ளில் புத்தர்கள் , அ.--