பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1041 இலக்கியச் செய்திகள் எல்லாம் புனைந்துரை சிறிது கலந்த நூல் வழக்கில் அமைந்தவை. கல்வெட்டுச் செய்திகள் எல்லாம் புனைந்துரை கலவா உலக வழக்கில் அமைந்தவை. ஆதலால், வரலாற்று ஆராய்ச்சியாளர் கல்வெட்டுக்களையே தக்க சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்து உண்மை காண்பாராயினர். அன்னோர் இலக் கியங்களைச் சிறந்த சான்றுகளாக மதித்து ஏற்றுக் கொள்வதில்லை. இலக்கியச் செய்திகளுள் சில, புனைந் துரையாக இருத்தல் ஒப்புக்கொள்ளத் தக்கதேயாயினும், அவற்றை அத்துணை எளியனவாகக் கருதித் தன்னி விடுதல் எவ்வாற்றானும் ஏற்புடையதன்று. கி. பி, இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவாய்ப் புற நானூற்றில் காணப்படும் செய்திகள் செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் தாங்கப்பட்டு உறுதியெய்து கின்றன. அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் நாம் எங் ஙனம் தள்ளுதல் கூடும்? ஆகவே, செப்பேடுகளாலும் கல் வெட்டுக்களாலும் தாங்கப்படும் உண்மைச் செய்திகளைத் தன்னகத்துக்கொண்டு சங்க நூல்களின் சிறப்பிற்கும் மாசற்ற தன்மைக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கு வது புறநானூறு எனலாம். 2. உறுதிப்பாடு புறகானூற்றுச் செய்திகளுள் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் உறுதிப்படுவன: 1. புறநானூற்றில் காணப்படும் கடைச்சங்க காலத் துச் சோழ மன்னர்களான பெருநற்கிள்ளி, சோழன் கரிகாலன், சோழன் செங்கணான் என் போர், கி. பி. பதி நிஞன்றும் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆனைமங்கலச்