பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

107 5. மேற் குறித்த சின்னமனூர்ச் செப்பேடுகளில் ' காணப்படும் 'மாபாரதந் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்ற தொடர்களில் பாண்டியரின் அருஞ் செயல்கள் இரண்டு கூறப்பட்டிருக்கின்றன. அவற் றுள் பாண்டியன் ஒருவன், கடைச்சங்க நாளில் மாபார தத்தை நம் தமிழ் மொழியில் செய்யுட்களாகப் பாடுவித் தமை ஒன்று. அப் பாண்டியன் வேண்டுகோளின்படி மாபாரதத்தைத் தமிழில் பாடியவர் புறநானூற்றின் முதற் "பாடலான கடவுள் வாழ்த்து இயற்றிய பெருந்தேவனார் ஆவர். அதுபற்றி அவ்வாசிரியர் பாரதம் பாடிய பெருந் தேவனார் என்று அந்நாளில் வழங்கப்பெற்றனர் என்பது பலரும் அறிந்ததே.

  • மற்றொன்று, பாண்டியர்கள் மதுரைமா நகரில் தமிழ்ச் சங்கம் நிறுவிப் புலவர்ககளப் போற்றி. வந்த மையேயாம். இச் செய்தியைப் புறநானூறு முதலான தொகை நூல்களால் நன் குணரலாம். 6. வடதிசை யதுவே வான்சேய் இமாம் - தென்றிசை ஆஅய் குடியின் குயிற் பிறழ்வது மன்னோவிம் மலர் தயை யுலகே"

(புறம்; 132.) என்று புறப்பாட்டில் புகழப்பட்டவனும் கடையெழுவள்ளல் களுள் ஒருவனும் ஆகிய வேள் ஆய் என்பான் பொதியில் மலையைச் சார்ந்து வேளூட்டை. ஆட்சிபுரிந்த குறு நில மன்னன் - என்பதைப் புறதா ஓாற்றுப் பாடல்களால் அறியலாம். பாண்டி நாட்டிற்குத் தென் மேற்கில் பேரி யாற்றுக்கும் குமரிமுனைக்கும் இடைப்பட்ட திருவாங்கூர் இராச்சியத்தின் தென்பகுதிக்கு முற்காலத்தில் 'வேண்டு' என்ற பெயர் இருந்தது என்பது பல கல்வெட்டுக்களால்