பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 புலப்படுகின்றது. வேள் ஆயின் மரபினர் கி. பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளிலும் அங்கு அரசாண்டனர் என்பதும் அன்னோர் கோச்சடையன் ரணதீரன், அவன் பேரன் நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டி வேந்தர்களால் வென்று அடக்கப்பட்டனர் என்பதும் வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படுகின்றன. இச்செய்திகளை, "பொருதூருங் கடற்பனையை மருதூருள் மாண்பழித்து ஆய்வோ யகப்படவே யென்னாமை யெறித்தழித்து எனவும், "தீவசர அயிலேத்தித் திளைத்தெதிரே வந்திறுத்த ஆய்வேளையுங் குறும்பரையும் அடலமருள் அழித்தோட்டி" எனவும் போதரும் வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி களால் உணச்சு, 7. கடையெழுவள்ளல்களுள் ஒருவனும், உண்டோர் நெடுங்காலம் உயிர்வாழ்ந்திருப்பதற்கு ஏதுவான கருதெல் லிப்பழம் ஒன்றை ஔவையாருக்கு அளித்தவனும், - ஒரு நாட் செல்லலம் இருநாட் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலை தாட் போன்ற விருப்பினன் மாதோ', (புறம்: 1011 | என்று ஒனவையாரால் மனமுருகிப் பாராட்டப் பெற்ற வனும் ஆகிய அதியமான் நெடுமானஞ்சி என்பான் கொங்கு மண்டலத்தில் தகடூரிலிருந்து அரசாண்ட ஒரு குறு நில மன்னன் என்பது புறநானூற்றால் அறியப்படுவ தொன்று.