பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112| என்பது புறநானூற்றால் அறியப்படுகின்றது. கபிலர் பிறந்த ஊர், மணிவாசகப் பெருமான் தோன்றியருளிய பாண்டிநாட்டுத் திருவாதவூரேயாம் என்பது பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணத்தால் உணரப் படுகின்றது. 'தென்பரம்பு நாட்டுத் திருவாதவூர்' என்று ஒரு கல்வெட்டு கூறுவதால் இத்திருவா தவூர் வேள் பாரியின் ஆட்சிக்குட்பட்ட பறம்பு நாட்டில் இருந்தது என்பது வெளியாகின்றது. எனவே, புலவராகிய கபிலரும் புரவலராகிய வேன்பாரியும் ஒரே நாட்டினர் ஆவர். ஆகவே, அன்ஞேர் இருவரும் ஒரே தேயத்தினராகவும் மத்த உணர்ச்சியுடையவராகவும் இருந்தமையின் நட்பிற் சிறந்து விலங்கினர் என்பது தெள்ளிது. 12. மூவேந்தர் சூழ்ச்சியினால் பாரி இறந்தபின்னர் அவன் மகளிரைத் தக்கார்க்கு மணஞ்செய்விக்க விரும்பி அழைத்துச் சென்ற புலவர் பெருமானாகிய கபிலர், விச்சிக் கோன், இருங்கோவேள் என்பவர்களை, மணம் புரிந்து 'கொள்ளுமாறு வேண்ட, அவர்கள் மறுக்கவே, அம்மக ளிரைப் பார்ப்பார்ப் படுத்து, பிறகு பாரியின் பிரிவுக் காற்றாது வடக்கிருந்து உயிர் நீத்தனர் என்பது புற தானூற்றில் கண்ட வரலாறாகும். இச்செய்திகளைத் திருக் கோவலூர் வீரட்டானேசுவரர் கோயிலிலுன் கல்வெட் டொன்று 2 'சிறிதுவேறுபடக் கூறுகின்றது. முதல் இராசராசசோழன் ஆட்சியில் கி. பி. 1012-ல் வரையப் பெற்றதும் அகவற்பாவில் அமைந்ததுமாகிய அக் கல்வெட்டில் பாரிமகளிரையும் கபிலரையும் பற்றிக் கூறும் பகுதி அடியில் வருமாறு: 1. South Indian Inscriptions Vol. VII, No. 423, . 2. Do VII, No. 863.