பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

137 வேறுபாட்டை நுணுகியாராயுமிடத்து முதல் இராசராச சோழனுக்குத் தன் கல்வெட்டுக்களில் முதலில் மெய்க் கீர்த்தி யொன்று அமைக்கும் விருப்பத்தை யுண்டு பண்ணியவை, பதிற்றுப்பத்திலுள்ள பதிகங்களே என்று கருதுவதற்கு இடம் உளது. அவன் தன் ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் 'காத்தளூர்ச்சாலை கலமறுத் தருளிய கோ இராசகேசரிவர்மன்' என்று தன்னைக் கூறிக் கொள்வதை அவன் கல்வெட்டுக்களில் காணலாம். எனவே கி. பி. 989 முதல் சேர நாட்டின் தொடர்பினைக் கொண்டிருந்த முதல் இராசராச சோழன், சேரமன்னர் களின் வீரச் செயல்களைப் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் கண்டு, அவற்றைப் பின்பற்றித் தன் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி அமைத்திருத்தலும் கூடும். இக் கொள்கை உறுதி யெய்துமாயின் கி. பி. பத்தாம் நூற்றாண்டிற்கு. முன்னரே பதிகங்கள் இயற்றப்பெற்றுப் பதிற்றுப்பத்தும் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும். பதிகங்களுக்கும் உரை காணப்படுகின்றமையால் அவை உரையாசிரியர் காலத்திற்கு முற்பட்டவை என்பது திண்ணம். பதிற்றுப்பத்தில் இக் காலத்தில் நமக்கு கிடைத் துள்ள எட்டுப் பத்துக்களின் பதிகங்களையும் ஆராயுங் கால், கடைச்சங்க காலத்தில் உதியன் மரபினர், இரும் பொறை மரபினர் ஆகிய இருசேரர் குடியினர், சேர மண்டலத்தைத் தனித்தனிப் பகுதிகளிலிருந்து அர சாண்டனர் என்பது நன்கு புலனாகின்றது. அவ்விரு மரபினரும் தாயத்தினர் ஆவர். அவர்களுள் எண்மரே இப்பொழுது கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பாட் இடைத் தலைவர்கள் என்பது உணரற்பாலதாம். அவ் வெண்மருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலா தன், பல்