பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146) இவ்வகையைச் சேர்ந்தனவேயாம். இப்போது இவை கிடைக்கவில்லையாயினும் அம் முடி மன்னர்கள் மீது பாடப் பெற்ற சில பிரபந்தங்கள் இந்நாளில் கிடைத்துள்ளமை ஓரளவு ஆறுதல் அளிக்கின்றது. அத்தகைய பிரபந்தங் களுள் விக்கிரமசோழன் உலாவும் ஒன்றாகும். இதனை இயற்றியவர் களிச் சக்கரவர்த்தியாகிய ஓட்டக்கூத்தர் ஆவர். இது முதற் குலோத்துங்க சோழன் புதல்வனாகிய விக்கிரமசோழன் மீது பாடப்பெற்றது. இவ்வேந்தன், படைத்தலைவர், அமைச்சர், குறு நில மன்னர், மண்டலிகர் முதலாஞேர் இருமருங்கும் சூழ்ந்துவர உலாப்போந்தான் என்று அந்நூலில் கூத்தர் கூறியுள்னர்; அங்ஙனம் கூறு மிடத்துச் சில அரசியல் தலைவர்களின் பெயர்களை நிரல்பட வைத்து அன்னோரது வீரச்செயல்களையும் பெருமைகளையும் மிகப்பாராட்டிச் செல்கின்றனர். அவர்கள், கலிங்கம் வென்ற தொண்டைமான், முனையர்கோன், சோழகோன், மறையோன் கண்ணன், வாணன், காலிங்கர்கோன், செஞ்சியர் கோன் காடவன், வேணடர் வேத்து, அநந்த பாவன், வத்தவன், சேதி நாடன், காரானை காவலன், அதிகன், வல்லவன், திரிகர்த்த ன் என்போர். இதனை, -முன்ன ங் குலையப் பொருதொருதாட் கொண்ட பரணி மலையத் தருத்தாண்டை பாலும் பலர் முடிமேல் ஆசிக்குங் கழகா வாகள் மனதாவவுள் பார்க்கு மதிமந்திர பாலகரிற் போர்க்குத் தொடுக்குங் கமழ்தும்பை தூசிநெடுஞ் சூடிக் கொடுக்கும் புகழ்முனையர் கோனும் முடுக்கரையுங் கங்களையு மாராட் டனையும் கலிங்கரையுங் கொங்கரையு மேனைக் குடகரையும் - தங்கோன் முளியும் பொழுது முரிபுருவத் தோடு