பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உரிமையார் பல்லவர்க்குத் திறைகொடா மன்ளவரை மறுக்கஞ் செய்யும் பெருமையாற் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே. என்னும் திருப்பாட்டால் அடிகள் காலத்தில் பல்லவ ஏது ஆட்சி தளர்ச்சியுறத் தொடங்கிற்றென்றும், அதனால் அன்னோர்க்குக் குறு நில மன்னர்கள் திறை செலுத்த மறுத்தனர் என்றும், பல்லவர்களுள் தந்தி வர்மன் (780-830) ஆட்சிக்காலத்தில்தான் இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்றும் ஆகவே அடிகள் தந்திவர்மனது ஆட்சியின் இறுதிக் காலமாகிய கி. பி. 825-ல் வாழ்ந்த வராதல் வேண்டு மென்றும் அன்னோர் கூறுகின்றனர். அடிகள் தம்காலத்துப் பல்லவ மன்னன் போர்வலிமை யற்றவன் என்று தல் அவலுக்குக் குறுநில மன்னர்கன் திறைகொடுக்க மறுத்தனர் என்றுதல் அப்பாடலில் கூறினாரில்லை; ஆனால் தம் காலத்துப் பல்லவ அரசனைச் சார்ந்தோர்க்குத் திருச்சிற்றம்பலத்தெம்பெருமான் அருள் புரியவராகவும் அவனோடு முரணிப்பகைஞராயினார்க்கு அருள் புரியாது தண்டனை விதிப்பவராகவும் இருந்துள்ள மையை தன்கு விளக்கி அம்மன்னனது ஒப்புயர்வற்ற சிவபத்தியின் மாட்சியைத் தெரிவித்துள்ளார். ஆகவே அடிகளது திருப்பாடலுக்கு அன்ஞேர் கொண்ட பொருள் சிறிதும் பொருந்தாமையின் அப்பெரியார் தந்திவர்மப் பல்லவன் காலத்தினர் அல்லர் என்பது தெளிவா தல் காண்க. இளி, சுந்தரமூர்த்திகள் வாழ்ந்த காலம் யாதென