பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

152 இவனைப்பற்றிய பிறசெய்திகள் தெரியவில்லை. இவன் மனைவியார் திருமழபாடி எம்பெருமானுக்கு நுந்தாவிளக்கு வைத்த செய்தியை வணர்த்தும் கல்வெட்டின் ஒரு பகுதி யைக் கீழே காண்க. "ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் வளர மலர் மகள் புணர உரிமை சிறந்த மணர் முடி சூடி மீனவர் நிலகொ. வில்லவர் குல தா' ஏனை மன்னவர் இரிய முற்றிழிநரத் திக்கனைத்துத் தன் சக்கம் நடாத்தி வீரசிம்மா சனத்து உலகுடையாளோடும் வீற்றி ருத்தருளிய கோவிராஜ கேசரி வன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 405-ஆவது தியா கவல்லி வள நாட்டுப் பொய்கை நாட்டு உடையார் திருமழுவாடி உடைய மகாதேவர்க்கு இரவு பகல் சந்திரா தித்தவல் தியதுந்தாவிளக்கு எரியக்கடவதாக வைத்தார் பூபாலசுந்தரனான சோழகோனார் தேவியார் இராசேந்திர சோழவள நாட்டு வண்டாழைக் கூற்றத்துச் சிற்றமூர் சிற்றாமூர் உடையான் பெருமாள் கற்பகமான களப்பரள ராஜர் மகள் கற்பகம் இராஜேந்திர சோழியார் யாண்டு 405-வது நாள் 260 முதல் வைத்த திருதுத்தா விளக்கு ஒன்றுக்கும் விட்ட செவரி ஆடு 90"-(S. I. I. Vol.V. No. 640.) 4. மறையோன் கண்ண ன்:-- இவன் விக்கிரம சோழமது அமைச்சர்களுள் ஒருவன்; மறையவர் குலத் தினன்; கண்ணன் என்னும் பெயரினன்: பெரும் புரிசை சூழ்த்த 'கஞ்சை | என்னும் பாரில் வாழ்ந்தவன். 1. " ..........கூந்தலரிந்தளித்தான் மலை செய் மதிற் கஞ்சை மானக்கஞ்சாறன் எனும் வள்ளயே என்னும் திருத்தொண்டர் திருவந்தாதிப் பாடலடியினால் சஞ்சாறு என்பது கஞ்சை என்று வழங்கப் பெற்றமை அறிக.-(திருத் தொண்டர் திருவந்தாதி... பாடல் 13.)