பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

155 'கண்ணாற்றுக்குத் தெந்த ராஜேந்திர சோழப்பேராற்றுக்கு வடக்கு நிலம் ஒருவேயியும் குணத்தில் இடைக்காட்டுக்குக் கிழக்கு சுடுகாட்டுக்குத் தெற்கு புஞ்சை நிலம் ஒருவேலியும் ஆக நிலம் மூன்றேகாலும் இறையிலியாக சந்திராதித்தவல் செல்ல நீர் வார்த்துக் கல்வெட்டிக் கொடுத்தேன், அத்தமல்லன் முடிகொண்டானான விருதராஜ பயங்கர வாண கோவரையனேன் "-(S. I. 1. Vol. V. No. 673) காலிங்கர்கோன்:- இவன் தொண்டை மண்டலத்தி ஒன்ன இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற் கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவன் இவன் முதற் குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன் ஆகிய இருவரது ஆட்சிக் காலத்திலும் படைத் தலைவனாக இருந்தவன் என்பது முன்னரே விளக்கப் பட்டது. இவன் குலோத்துங்க சோழன் வேணாடு மலை நாடு, வட நாடு முதலியவற்றோடு நிகழ்த்தியபோர் களில் படைத் தலைமை பூண்டு வெற்றியெய்தி அதனால் தன் அரசனுக்குப் பெரும் புகழை புண்டுபண்ணியவன் ; பொன்னம்பலக்கூத்தன், அருளகாள், அரும்பாக்கிழான் முதலான பெயர்களையு:கடயவன் ; அரசனால் அளிக்கப் பெற்ற காலிங்கராயன் என்ற பட்டம் உடையவன் , சிவ பத்திச் செல்வம் வாய்க்கப்பெற்றவன் ; தில்லையம்பதி யிலும் திருவதிகை வீரட்டானத்திலும் திருப்பணிகள் புரிந்து பல நிபந்தங்கள் விட்டவன் ; சமயகுரவர்கள் அருளிய தேவாரப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுது வித்துத் தில்லையம்பலத்திற் சேமித்து வைத்தவன், இவன் கோயில்களுக்குத் திருப்பணி புரிந்ததையும் நிபத் தங்கள் விட்டதையும் அறிவிக்கும் கல்வெட்டுக்கள் பல உண்டு, அவற்றுள் ஒன்று அடியில் வருமாறு:--